நாங்க என்ன திமுக, அதிமுகவா? பாஜகவோடு ஒரு போதும் கூட்டணி இல்லை.. அடித்து சொன்ன விஜய்.. பாய்ச்சல்!
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் வெற்றி பெற முடியாது, கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை, தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக, பாஜகவிற்கு எதிரானதாகத்தான் எப்போதும் இருக்கும் என்று தவெக தலைவர் விஜய் கட்சியின் செயற்குழு மாநாட்டில் பேசி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் சென்னையில் நாளை மறுநாள் ஜூலை 6 ஆம்தேதி நடைபெறும் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கோரும் ஆர்ப்பாட்டம், விஜய்யின் தமிழ்நாடு தழுவிய சுற்றுப்பயண ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகின்றன.

சென்னையில் நடந்து வரும் தமிழக வெற்றிக் கழக செயற்குழுவில் பேசிய விஜய் பாஜகவை கடுமையாக தாக்கினார். அதில், தந்தை பெரியாரை அவமதித்தோ, அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ அரசியல் செய்ய முடியாது.எங்கள் மதிப்புமிக்க தலைவர்களை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய நினைத்தால் முடியாது. இதை எல்லாம் செய்துவிட்டு அதில் பாஜக ஒருபோதும் வெற்றி பெற முடியாது.
தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக, பாஜகவிற்கு எதிரானதாகத்தான் எப்போதும் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கொள்கை எதிரியான பா.ஜ.க-வுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் என்றைக்கும் கூட்டணி கிடையாது; தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து பா.ஜ.க அரசியல் செய்வதை ஏற்க முடியாது
சுயநல அரசியல் லாபங்களுக்காக பா.ஜ.க-வுடன் கூடிக் குலைந்து கூட்டணி வைக்க த.வெ.க ஒன்றும் தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ இல்லை. தவெக தலைமையில் அமையும் கூட்டணி எப்போதும் திமுக மற்றும்
பாஜகவிற்கு எதிரானதாகதான் இருக்கும். அரசியல் ஆதாயங்களுக்காக, பாஜக மக்களிடையே வேற்றுமையை விதைத்து குளிர்காய நினைக்கிறது. திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை; பாஜகவின் விஷமத்தனமான வேலைகள் தமிழ்நாட்டில் எடுபடாது.
தவெக கூட்டணி எப்போதும் திமுக, பாஜகவுக்கு எதிராகவே இருக்கும்; பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் பாஜகவின் அரசின் செயலை தவெக ஏற்றுக் கொள்ளாது, கீழடி விவகாரத்தில் தமிழர்களின் உண்மையை மறைக்கும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். பரந்தூரில் உள்ள 1,500 குடும்பங்களின் நிலை முதலமைச்சருக்கு அவ்வளவு சர்வசாதாரணமாக போய்விட்டதா? மக்களின் முதல்வர் என எப்படி நா கூசாமல் சொல்கிறீர்கள் சார்? மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து பரந்தூரில் விமான நிலையம் தேவையா? என்று த.வெ.க தலைவர் விஜய் பேசி உள்ளார்.
முதல்வர் வேட்பாளராக விஜய்
முன்னதாக தவெக செயற்குழு கூட்டத்தில் 2026 சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அதிமுக - பாஜகவின் கூட்டணி அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டு வந்த நிலையில், அந்தக் கூட்டணியில் தவெக இணையாது எனத் தெரிகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications