நள்ளிரவில் விஜய்க்கு பெரிய ட்விஸ்ட்! நேற்று, இன்று, நாளை.. எப்பவுமே திமுகவுடன் தான்.. IUML திட்டவட்டம்
சென்னை: தவெகவுடன் கூட்டணி இல்லை, திமுகவுடனே கூட்டணி என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) தலைவர் காதர் மொகிதீன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்று மாலையில் தவெக நிர்வாகிகள் காதர் மொகிதீனை சந்தித்து ஆதரவு கேட்டனர். பின்னர் காதர் மொகிதீன் ஸ்டாலினை சந்தித்த பிறகு நிலைப்பாட்டை கூறுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்றும் இருந்தோம்.. இன்றைக்கும் இருக்கிறோம்.. நாளைக்கும் இருப்போம்.. திமுகவுடனேயே கூட்டணி என்று கூறினார்.
தமிழக அரசியல் களத்தில் நொடிக்கு நொடி பல்வேறு அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. தவெக தலைவர் விஜய் எப்போது தான் முதல்வராக பதவியேற்பார் என்று ஒரு தரப்பினர் காத்திருந்து வரும் நிலையில் இன்னும் ஆளுநர் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை.

இதனால் நாளை விஜய் முதல்வராக பதவியேற்கவில்லை. இது விஜய் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய்யின் தவெகவினர் இன்று ஆளுநரை சந்திக்க போகும் முன்பு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆதரவு அளித்து இருப்பதாக கூறியிருந்தது. நேற்று ஐயூஎம்.எல் திமுகவுக்கே ஆதரவு என கூறியிருந்தது. இதனால் தவெக ஆட்சி அமைத்துவிடும் என பேசப்பட்டது.
ஆனால் சிறிது நேரத்தில் தவெகக்கு ஆதரவு இல்லை என ஐயூஎம்.எல் அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து காதர் மொகிதீன் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் விசிக தலைவர் தொல் திருமாவளவனும் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசித்தார். இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காதர் மொகிதீன் கூறியதாவது:-
விஜய்யின் தவெகவுக்கு நாங்கள் ஆதரவு அளித்ததாக ஒரு சில பத்திரிகைகளில் போட்டிருந்தனர். நாங்கள் தெளிவாக சொல்லிவிட்டோம். எங்களை அந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் வந்து சந்தித்தனர். அப்போது அவர்களிடம் தெளிவாக நாங்கள் சொல்லிவிட்டோம்.
இந்த தேர்தல் மட்டுமல்ல.. வரும் தேர்தல்களிலும், முஸ்லீம் லீக் கட்சியை பொறுத்தவரை மதசார்பற்ற திமுக கூட்டணியுடன் தான் கூட்டணி வைப்போம். நேற்றும் இருந்தோம்.. இன்றைக்கும் இருக்கிறோம்.. நாளைக்கும் இருப்போம்.. திமுகவுடனேயே கூட்டணி.. என்று கூறினார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications