விஜய்யுடன் கூட்டணி இல்லையா? சீமான் திட்டம் என்ன? ஏன் இந்தத் திடீர் முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யுடன் கூட்டணி இல்லை என்ற முடிவை சீமான் எடுப்பதற்கான காரணம் என்ன? இந்தத் திடீர் மனமாற்றத்தின் பின்னால் உள்ள அரசியல் ஆதாயம் என்ன?

விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து அவரை தன் பக்கம் இழுக்க சீமான் படாதபாடுபட்டார். இன்னும் சொல்லப் போனால் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே ஒரு தமிழன் தமிழ்நாட்டை ஆளக்கூடாதா? தம்பி விஜய் வந்தால் வரவேற்போம் என்றும் பேசி இருந்தார். இப்போது திடீரென்று அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார் சீமான். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி இல்லை என்றும் நாதக தனித்தே போட்டியிடும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

vijay seeman

ஏன் இந்த திடீர் முடிவு பற்றி பாஜகவைச் சேர்ந்த ராம ஸ்ரீநிவாசன், 'விஜய் தன்னை ஒரு மாற்று என்று சொல்லிக் கொண்டுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறார். எனவே எடுத்த உடனேயே கூட்டணி வைக்கமாட்டார். கட்சி ஆரம்பித்த உடன் யாருமே கூட்டணி வைத்ததாக வரலாறு இல்லை. எம்.ஜி.ஆர் வைத்தது இல்லை. விஜயகாந்த் வைத்தது இல்லை. கமல்ஹாசன் கூட தனித்துத்தான் போட்டியிட்டார். ஆகவே விஜய்யும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார். நாங்கள் பாஜக கூட்டணியில் ஒருவரைத்தான் முதல்வராக அறிவித்து களம் காண்போம். விஜய் அவரே முதல்வர் என்கிறார். அவர் எப்படி கூட்டணிக்கு வருவார்?' என்கிறார்.

ஆனால், அண்ணாமலை இவரது கருத்துக்கு மாறாகப் பேசுகிறார். 'பாஜக கூட்டணி என்பது மாமன் மச்சான் கூட்டணி. எனவே யார் வேண்டுமானாலும் கூட்டணிக்குள் வரலாம்' என்கிறார். சீமானைவிட ஆளும் கட்சியாக இருக்கின்ற பாஜகவே இறங்கி வருகிறது. ஆனால், சீமான் மிக தைரியமாக விஜய்யுடன் கூட்டணி கிடையாது என அறிவிக்கிறார். இதற்கு என்ன காரணம்? இவர்கள் இணைவதில் உள்ள தடைகள் என்ன? அது பற்றி மூத்த பத்திரிகையாளர் பிரியன் விரிவாக அலசி ஆராய்ந்து பேசி இருக்கிறார்.

அவர் சீமான் ஏன் விஜய்யை நிராகரித்திருக்கிறார் என்பது பற்றி பேசுகையில், "நாம் தமிழர் கட்சி தனக்கு என்று ஒரு தனி அரசியல் கொள்கையை வைத்திருக்கிறது. தமிழ்த் தேசியம் என்பது அவர்களின் அடையாளமாக இருக்கிறது. சீமான் இதனை முன்வைத்து 3% தொடங்கி இன்றைக்கு 8% வரை வாக்குகளைப் பெற்றுள்ளார். அந்தக் கட்சி தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறது.

அந்தக் கட்சியை, சீமானை நம்பி இளைஞர்கள் அதிகம் பேர் வந்திருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து பல தேர்தலைச் சந்தித்தும் வெற்றி என்பது இல்லை. வெறுமனே வாக்கு சதவீதத்தை அதிகரித்து என்ன பலன்? ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டாமா என்று ஒரு கேள்வி, ஆதங்கம் அவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அது நியாயமானதுதான்.

சீமானுக்கு ஏற்கெனவே ஆட்சி அதிகாரத்தில் உள்ள திமுக, அதிமுகவுடன் கூட்டணி சேர்வதில் சரியாக அமையவில்லை. அவர் அதைத் தவிர்க்கவே விரும்புகிறார். இன்னும் சொல்லப்போனால் அந்தக் கட்சிகளை எல்லாம் அவர் கடுமையாக விமர்சனம் செய்கிறார். அந்தக் கட்சிகளின் தலைவர்களையும் தாக்கி பேசிவருகிறார். இதுவரை சீமான் தனித்து நின்றுவிட்டார். இவ்வளவு தூரம் அவர் வளர்ந்து வந்துவிட்டார். இனிமேல் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது நல்லது இல்லை என்பதே என் கருத்து.

அப்படி மீறி வைத்தால் அதிமுகவின் அவப்பெயர்கள் எல்லாம் சீமான் மீது விழும். கூடவே அதிமுக வலுவிழந்து வரும் கட்சியாக மாறிக் கொண்டிருக்கும் காலத்தில் இவர் அந்தக் கட்சியுடன் இணைவதால் ஒரு இலாபமும் இல்லை. சீமான் 8% வாக்குகளை வைத்துள்ளார். அதனால் அதிமுக இவரை விரும்புவது இயற்கை. ஆனால், கூட்டணி வைத்தால் சீமானின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும்.

சீமான் இதுவரை தனித்தே களம் கண்டிருப்பதால் அவர் பாஜக பக்கம் போனாலும் அதிமுக பக்கம் போனாலும் இமேஜ் பாதிக்கப்படவே செய்யும். இதில் விஜய்யுடன் சீமான் சேர்வதுதான் இயற்கையான கூட்டணியாக இருக்கும். அதேபோன்று விஜய்க்கும் சரியாகவே இருக்கும். இதில் என்ன பிரச்சினை என்றால் விஜய்க்கும் சீமானுக்கு 4% வாக்குகள் இளைஞர்கள் மத்தியில் உள்ளன.

குறிப்பாகச் சொன்னால் நாதகவுக்கு உள்ள 3% வாக்குகள் இளைஞர்களின் வாக்குகள் விஜய்க்கும் போகக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. சீமானுக்கு 8% வாக்குகள் இருக்கின்றது என்பது அவர் நிரூபித்துக் காட்டி இருக்கிறார். விஜய்க்கு எவ்வளவு சதவீதம் வாக்குகள் உள்ளன என்பதை இன்னும் யாராலும் கணிக்க முடியவில்லை. அவர் தேர்தலைச் சந்தித்தால்தான் அதைக் கணிக்க முடியும். அவரால் கூட அப்போதுதான் தனக்கான பலம் என்ன என்பதை நிரூபித்துக் காட்ட முடியும். அதற்காகவே அவர் தனித்துப் போட்டியிட வேண்டிய தேவை இருக்கிறது.

vijay seeman

அது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியாக சீனியர் சீமான். அவருக்கு தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கும். விஜய் அதை ஏற்பார் என சொல்ல முடியாது. அவர் சீமானை விடப் புகழ் வாய்ந்த நடிகர். அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தவே அவரது தொண்டர்கள் விரும்புவார்கள். அவரும் அதையே விரும்புவார். அந்த இடத்தை சீமானுக்கு விட்டுத் தரமாட்டார். அப்போது யார் முதல்வர் என இருவருக்கும் உள்ளாக ஒரு பிரச்சினை எழும். இதுவே கூட்டணி சேர்வதற்கான முக்கிய காரணமாகப்படுகிறது.

இந்தத் தடைகளை மீறி ஒன்று சேர்ந்தால், இந்தக் கூட்டணி குறைந்த பட்சம் 18% சதவீதம் வாக்குகள் கிடைக்கும். அதன் மூலம் நாதக, தவெக இரண்டு கட்சிகளிலிருந்தும் சில எம்.எல்.ஏக்கள் கிடைக்கலாம். சட்டசபைக்குள் செல்ல வாய்ப்பும் உருவாகலாம். தேர்தல் காலங்களில் எதிரும் புதிருமான கொள்கை கொண்ட கட்சிகளே கூட்டணி சேர்வதை நாம் பார்த்து இருக்கிறோம். அப்படி எனில் இவர்களும் கூட்டணி சேரலாம். அது விஜய் மற்றும் சீமான் பெருந்தன்மையைப் பொறுத்து உள்ளது.

இன்றைய நிலைமையில் அதிமுகவும் திமுகவும் விஜய்க்கும் சீமானுக்கும் ஒத்து வராது. அப்படி எனில் இவர்களுக்கு பெட்டர் ஆப்ஷன் இல்லை. அதிமுக 2026இல் மெகா கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவு. எனவே விஜய், சீமான் இணைவதுதான் சரியாகவும் பொருத்தமாகவும் இருக்கும்" என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+