சோதனை மேல் சோதனை! செந்தில் பாலாஜிக்கு பிரச்சினை? சென்னை ஹைகோர்ட் போட்ட பரபரப்பு உத்தரவு
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை 4 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவருக்கு 4 மாதங்களுக்கு ஜாமீன் கிடைக்காத நிலை உள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் சில காலத்திற்கு துறை இல்லாத அமைச்சராக தொடர்ந்த நிலையில் எதிர்க்கட்சகிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து அவருடைய ஜாமீன் மனு மீதான விசாரணையில் அவர் அமைச்சராகவே இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக அமலாக்கத் துறை வாதிட்டது.
இதையடுத்து அடுத்த முறை ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்ததற்கு ஒரு நாளுக்கு முன்பு செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அவர் 3 முறை ஜாமீன் மனுவை தாக்கல் செய்து அவை ரத்து செய்யப்பட்டுவிட்டன. இதையடுத்து நேற்று 41 ஆவது முறையாக அவருடைய நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீன் மனுவை ஆனந்த் வெங்கடேசன் தள்ளுபடி செய்து 3 மாதங்களில் விசாரணையை முடிக்குமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் இதுவரை முடிக்கவில்லை. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன் கூறுகையில், செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை 4 மாதங்களில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முடிக்க வேண்டும். மனு மீது மனுத்தாக்கல் செய்யாமல் வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவை சாதகமாக காட்டக் கூடாது. 4 மாதங்களில் வழக்கை முடிக்கும் திறமை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லிக்கு உள்ளது. இவ்வாறு ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார். எனவே இன்னும் 4 மாதங்களுக்கு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்படாது என்றே புரிந்து கொள்ள முடிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications