ரேஷன் கார்டுதாரர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. கைரேகை சரிபார்ப்பு வொர்க் ஆகாவிட்டாலும் ரேஷன் பொருட்கள்!
சென்னை: கைரேகை, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் வழங்க இயலாத மூத்த குடிமக்களுக்கு, ப்ராக்ஸி முறையில் பதிவேட்டில் கையொப்பம் வாங்கிக்கொண்டு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை இயக்குநர், அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அரசு போலி ரேஷன் கார்டுதாரர்களை ஒழிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்ய வேண்டும். கைரேகை பதிவு செய்யாமல் இருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் அருகில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கைரேகை பதிவு இன்றி ரேஷன் பொருள் வழங்கப்படாது எனக் கூறி வருகிறது.

தமிழ்நாட்டில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்த ரேஷன் கடைகள் மூலம் 2.26 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகிறது. இதில் 98.45 லட்சம் முன்னுரிமை PHH ரேஷன் கார்டுகளில் 3 கோடி உறுப்பினர்களும், 18.64 லட்சம் அந்தியோதயா AAY ரேஷன் கார்டுகளில் 62.88 லட்சம் பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த இரண்டு பிரிவினருக்குமான அரிசி ஒதுக்கீட்டில், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கோதுமையை ஒன்றிய அரசு தேசிய ஒதுக்கீட்டின் கீழ் இலவசமாக வழங்குகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யும் தாய்மானவர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்குச் சென்று, கார்டுதாரரின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
தொலைத்தொடர்பு சிக்னல் பிரச்சனையால், கைரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு செய்ய முடிவதில்லை. இதனால் பொருட்கள் வழங்கப்படாமல் ரேஷன் கார்டுதாரர்களை அலைக்கழிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குநர் சிவராசு, அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று குடிமைப்பொருட்களை விநியோகம் செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தின் கீழ் நியாய விலை, அங்காடி பணியாளர்கள் பொது விநியோகத் திட்டப் பொருட்களை பயனாளர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கை ரேகை சரிபார்ப்பு முறை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பட்டியலிட முடியாததால் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படாமல் அலைக்கழிப்பதாக மாவட்டங்களிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
எனவே இந்தத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும்போது கைரேகை சரிபார்ப்பு முறை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு முறைகளில் வழங்க இயலாத நிலையில், ப்ராக்ஸி முறையில் பயனாளர்களுக்கு உரிய பதிவேட்டில் கையொப்பம் பெற்றுக்கொண்டு பொருட்களை வழங்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு எவ்வித சூழ்நிலையிலும் பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்காமல் அலைகழிக்கக் கூடாது என்பதை அனைத்து நியாய விலை அங்காடி பணியாளர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications