வேகமாக பரவிய செய்தி.. வாட்ஸ் ஆப் முழுக்க ஒரே பரபரப்பு.. பதறியடித்து ஓடி வந்த தமிழக பாஜக.. போச்சு!
சென்னை: தமிழக பாஜக தலைவர்கள் பதறியடித்துக் கொண்டு பதில் சொல்லும் அளவிற்கு நேற்று இணையம் முழுக்க வைரலாக ஒரு செய்தி பரவியது. பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியான சில நிமிடங்களில் பரவிய இந்த செய்தியால் பாஜக நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக பாஜக தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நேற்று மாலை வெளியான இந்த அறிக்கையில் பல ஷாக் அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன. வெளிமாநில ஊழியர்களுக்கு தமிழ்நாட்டில் வீடு, மதமாற்ற தடை சட்டம், மாட்டிறைச்சி தடை சட்டம் என்று பல அறிவிப்புகளை பாஜக வெளியிட்டுள்ளது.
பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு இருக்கும் சில அறிவிப்புகள் தேர்தல் சமயத்தில் அக்கட்சிக்கே எதிராக திரும்புவதற்கும் வாய்ப்பு உள்ளது.

எப்படி
இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று பாஜக வெளியிடாத அறிவிப்பு ஒன்று இணையம் முழுக்க வைரலாக பரவி வந்தது. தேர்தலில் வெற்றிபெற்றால் தமிழ்நாட்டின் பெயரை தக்ஷிண பிரதேசம் என்று மாற்றுவோம் என்று பாஜக அறிவித்ததாக நேற்று செய்திகள் வெளியாகின. அலஹாபாத்தை பிரயாக்ராஜ் என்று மாற்றியது போல தமிழ்நாட்டின் பெயரையும் மாற்றுவோம் என்று பாஜக தனது அறிக்கையில் குறிப்பிட்டதாக இதில் தகவல்கள் இடம்பெற்று இருந்தன.

கொசுறு
இதோடு ஒரு கூடுதல் தகவலும் வைரலாக பரவியது. தமிழ்நாடு என்ற பெயர் அண்ணா வைத்தது. இதனால்தான் பாஜக அதை மாற்ற போகிறது. சமஸ்கிருத முறையில் தமிழ்நாட்டிற்கு தக்ஷிண பிரதேசம் என்று பெயர் வைப்போம் என்று பாஜக கூறியதாக செய்திகள் பரவின.

வாட்ஸ் ஆப்
இந்த செய்தி நேற்று வாட்ஸ் ஆப்பில் பெரிய அளவில் வைரலானது. பல வாட்ஸ் ஆப் குரூப்களில் தமிழ்நாட்டின் பெயரை பாஜக மாற்ற போகிறது என்று அதிரடியாக மெசேஜ்கள் உலா வந்தது. பலரும் இதை உண்மை என்று நம்பி இணையம் முழுக்க ஷேர் செய்தனர். டிவிட்டர், பேஸ்புக்கிலும் கூட இதே செய்தி வைரலாக பரவியது.

உண்மை என்ன
ஆனால் இந்த செய்தியில் உண்மை இல்லை. பாஜக தேர்தல் அறிக்கையில் இப்படி எந்த அறிவிப்பும் இல்லை. இப்படி ஒரு தகவல் பரவுகிறது என்று தெரிந்ததும் பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் சிலர் இதற்கு விளக்கமும் கொடுத்தனர்,. இணையத்தில் இப்படி பரவும் செய்திகள் பொய்யானது..இதை மக்கள் நம்ப வேண்டாம் என்று டிவிட்டரில் பாஜகவினர் பதறியடித்துக்கொண்டு மறுப்பு தெரிவித்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications