3 நாட்கள் லீவு கிளம்பாக்கத்திலேயே போய்டும் போல! பஸ்ஸே இல்லை.. புலம்பும் பயணிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர்ந்து 3 நாட்கள் லீவு கிடைப்பதெல்லாம் அதிசயத்திலும், அதிசயம்! இப்படி இருந்தும் கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் உரிய நேரத்திற்கு இயக்கப்படாததால், பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

லீவு நாள் வந்துவிட்டாலே, சென்னையை விட்டு அவ்வளவு சீக்கிரத்தில் வெளியே போய்விட முடியாது. அந்த அளவுக்கு டிராபிக் ஜாம் இருக்கும். இந்த முறையும் இப்படித்தான் நடந்திருக்கிறது. நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை சென்னை தாம்பரம், கிளாம்பக்கம் என போக்குவரத்து நெரிசல் நீடித்தது.

kilambakkam

எனவே இரவு சொந்த ஊருக்கு போகாதவர்கள், இன்று காலை சொந்த ஊருக்கு கிளம்பினார்கள். ஆனால், பேருந்துகள் இருந்தும் அவை சரியான நேரத்திற்கு இயக்கப்படாததால், பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். காலை 9 மணிக்கு கும்பகோணத்திற்கு போக பேருந்தில் ஏறி பயணிகள் அமர்ந்திருக்கிறார்கள். பேருந்துகள் முழுமையாக நிரம்பிய பின்னரும் அது எடுக்கப்படாததால் பயணிகள் டென்ஷன் ஆகிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் பயணிகள் புலம்பி தள்ளினர். விஷயத்தை கேட்ட அதிகாரிகள், இரவு புறப்பட்டு அதிகாலையில்தான் இந்த பேருந்துகள் சென்னைக்கு வந்திருக்கின்றன. மதியம் 12.30க்கு தான் இவை கிளாம்பாக்கத்திலிருந்து புறப்படும். ஆனால், 3 மணி நேரத்திற்கு முன்னாடியே வந்துவிட்டது, பேருந்து புறப்படவில்லை என்று சொன்னால் எப்படி? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

நேற்றிரவு பேருந்து கிடைக்கவில்லை. எனவே ஊருக்கு போகாதவர்கள் இன்று காலை புறப்பட்டு போக திட்டமிட்டுதான் கிளாம்பாக்கம் வந்திருக்கிறார்கள். ஆனால், போதுமான பேருந்து இருந்தும் அதை இயக்க மாற்று ஓட்டுநர்கள் இல்லாததால் நாங்கள் ஊருக்கு போக முடியாமல் தவித்து வருகிறோம். 9 மணிக்கே பேருந்துகள் புறப்பட்டிருந்தால், இந்நேரம் நாங்கள் பாதி தூரத்திற்கு சென்றிருப்போம். எனவே இதுபோன்ற நேரங்களில் போதுமான மாற்று ஓட்டுநர்கள் இருப்பதை போக்குவரத்து கழகம் உறுதி செய்ய வேண்டும்.

விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக ஒவ்வொரு முறையும் அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், இப்படி இயக்கப்படும் பேருந்துகள் போதுமானதாக இருப்பதில்லை என்பதே பயணிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

சரி அரசு பேருந்துகள்தான் இப்படி எனில், தனியார் பேருந்துகள்.. பிளைட் ரேஞ்சுக்கு டிக்கெட் விலையை ஏற்றி வைத்திருக்கின்றன. லீவு நாட்கள் வந்தால் போதும்.. சின்ராசை கையில் பிடிக்க முடியாது என்கிற கதையாகத்தான் ஆம்னி பேருந்துகளின் நிலை இருக்கிறது. என்னதான் அரசு ஆய்வு மேல் ஆய்வு நடத்தினாலும், ஆம்னி பஸ்ஸின் ஆட்டத்தை மட்டும் அடக்க முடியவில்லை. இதற்கு தவெக அரசு தீர்வு காணுமா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+