16வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.. இன்றைய விலை நிலவரம் என்ன?
சென்னை: நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலையில் 16வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.100.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 105.41 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 96.67 க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டர் 121 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 104 ரூபாயை தாண்டி உள்ளது.

கடந்த இரண்டு வாரமாக பெட்ரோல், டீசல் ஒரே விலையில் விற்கப்பட்டு வருகிறது. நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலையில் 15வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. முன்னதாக கடந்த மாதம் முழுக்க பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டது.
மார்ச் 6ம் தேதி வரை தினமும் பெட்ரோல் டீசல் விலை 30 பைசா முதல் 80 பைசா வரை தினமும் உயர்ந்தது. இது மக்கள் இடையே பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது.
கடந்த மாதம் மட்டும் பெட்ரோல் விலை 9.56 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 9.86 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் வேகமாக உயர்ந்தது.
அதே சமயம் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் இந்தியா கூடுதல் கச்சா எண்ணெய்களை வாங்க தொடங்கியது. இந்த நிலையியில் இந்த நிலையில் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வந்த பெட்ரோல் டீசல் விலை தற்போது கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications