பெட்ரோல், டீசல் விலையில் 5வது நாளாக மாற்றமில்லை - காரணம் என்ன
ஐந்து நாட்களாக எந்த வித மாற்றமும் இன்றி பெட்ரோல், டீசல் விலை விற்பனையாகிறது. விலை குறைந்து வந்த நிலையில் மீண்டும் எந்த வித மாற்றமுமின்றி விற்பனையாகிறது.
சென்னை: பெட்ரோல், டீசல் கடந்த 5வது நாளாக எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.92.43,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.85.75ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
ஜூன் மாதம் முதல் உயரத் தொடங்கிய பெட்ரோல், டீசல் விலை பிப்ரவரி மாதத்தில் உச்சத்தை எட்டியது. இந்தியாவின் சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைக் கடந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றன. போராட்டங்களை நடத்தி வருகின்றன.
நாடாளுமன்றத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலித்தது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி இருந்தது. பின்னர் சில நாட்களில் பெட்ரோல்,டீசல் விலை குறைந்தது.
பெட்ரோல், டீசல் விலைகள் கடந்த வாரத்தில் குறைந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.43 ரூபாய், டீசல் லிட்டர் 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது. 5 நாட்களாக எந்த வித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications