38வது நாள்.. பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை.. இன்றைய நிலவரம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலையில் 38வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை.

No Change in Petrol, Diesel prices in India for the straight 38th day

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது. மக்கள் இடையே இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் வேகமாக உயர்ந்தது. பல மாநிலங்களில் டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளின் விலைகள் உயர்ந்தன.

இந்தியாவிலும் கடந்த பிப்ரவரி - மார்ச் மாதம் தொடர்ச்சியாக 17 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. மார்ச் 6ம் தேதி வரை தினமும் பெட்ரோல் டீசல் விலை 30 பைசா முதல் 80 பைசா வரை தினமும் உயர்ந்தது. இது மக்கள் இடையே பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த மாதம் மட்டும் பெட்ரோல் விலை 9.56 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 9.86 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வந்த பெட்ரோல் டீசல் விலை தற்போது கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலையில் 38வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.100.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 105.41 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 96.67 க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டர் 121 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 104 ரூபாயை தாண்டி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+