ஆறுதல்.. பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை.. நேற்றைய விலையில் விற்பனை.. நிலவரம் என்ன?
சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்று பெட்ரோல், டீசல் விற்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த இரண்டு வாரமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 17 நாட்களுக்கு முன் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.

அதன்பின் தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில்தான் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் பட்சத்திலும் இந்தியாவில் எரிபொருள் விலை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த 17 நாட்களில் 3 நாட்கள் தவிர மற்ற 14 நாட்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
தினமும் 30 - 80 பைசா வீதம் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 17 நாட்களில் இதுவரை பெட்ரோல் விலை 9.56 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 9.86 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
மும்பையில் பெட்ரோல் விலை லிட்டர் 121 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 104 ரூபாயை தாண்டி உள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்று பெட்ரோல், டீசல் விற்கப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.100.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 105.41 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 96.67 க்கு விற்கப்படுகிறது.
-
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications