பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? இன்றைய விலை என்ன? சென்னையில் நிலவரம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுக்க 73வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருப்பது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

No change in petrol price for consecutive 73nd day in India

டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 96.35 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 89.52 க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை லிட்டர் 101.94 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 87.89 ரூபாயை தாண்டி உள்ளது.

சென்னையில் அதே விலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது. முன்னதாக இந்தியாவில் கடந்த 2 மாதம் முன் தினமும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது.

இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் தானாக போக்குவரத்து செலவும் உயரும். இதுவே பணவீக்கத்திற்கும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது. தேர்தல் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.

இதனால் காய்கறிகள் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை தீவிரமாக உயர்ந்தது. மக்கள் இடையே இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 15.88 சதவீதமாக உயர்ந்தது. கடந்த 24 வருடங்களில் இதுதான் மிக அதிகம் ஆகும். நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. மக்களின் கடும் எதிர்ப்பால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டது.

அதன்பின் பெட்ரோல் டீசல் விலையில் இன்று வரை எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+