Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி வேண்டாம்.. ஒரே ‘டார்கெட்’ இதான்.. பட்டென போட்டு உடைத்த அண்ணாமலை.. ஆஹா.. அதுதான் திட்டமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எம்.பி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், தமிழ்நாட்டில் பாஜகவை ஆட்சியில் அமர்த்தவே தான் பாஜகவில் சேர்ந்ததாகவும் கூறியுள்ளார். அண்ணாமலை, தனது டார்கெட் தமிழ்நாடு முதல்வர் சீட் தான் என மக்களுக்கு மட்டுமல்ல, பாஜக தலைமைக்கும் ஓப்பனாகவே சொல்லியிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஐபிஎஸ் அதிகாரி பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று சில மாதங்களில் அரசியலுக்கு வந்த அண்ணாமலை, 2021 தேர்தலில் பாஜக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர், எல்.முருகன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டதையடுத்து பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

No contest in mp election: Then what is Annamalais target?

அண்ணாமலை : அண்ணாமலை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டது முதலே நாளொரு பரபரப்பு, பொழுதொரு பிரஸ் மீட் என தமிழ்நாடு பாஜக பரபரத்து வருகிறது. திமுக அரசுக்கு எதிராக நாள்தோறும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அண்ணாமலை. இதனால், எப்போதும் லைம் லைட்டிலேயே இருந்து வருகிறார்.

2024 தேர்தல் : 2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி தமிழ்நாடு பாஜக தற்போது தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. பாஜக ஏற்கனவே செல்வாக்கு மிக்க தொகுதிகள் உட்பட பல இடங்களில் பூத் கமிட்டி பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். தங்கள் பலத்தை முழுமையாக வரும் 2024 தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள பாஜக முடிவு செய்துள்ளது.

முடிந்தவரை அதிக சீட்களைப் பெற்று களமிறங்க வேண்டும் என்பதிலும் பாஜக கவனமாக உள்ளது. கோவை மக்களவை தொகுதியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட காய்களை நகர்த்தி வருவதாக கூறப்பட்டது. கோவையில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனே ஓடிச் செல்கிறார் அண்ணாமலை.

கோவை சீட் : கோவை எம்பி தொகுதி மேற்கு மண்டலத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதி. இந்த தொகுதியில் இதுவரை திமுக இரு முறை மட்டுமே வென்றுள்ளது. அதிமுக ஒரு முறை வென்றுள்ளது. பாஜக இரு முறை வென்றுள்ளது. கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளும் சில முறைகள் வென்றுள்ளனர். ஏற்கெனவே பாஜக இரு முறை வென்றுள்ளதால் இந்த தொகுதி பாஜகவுக்கு வலுவானதாகவே கருதப்படுகிறது.

இதனால் தான் அண்ணாமலை கோவை எம்.பி தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் பரபரத்தன. கோவை தொகுதியில் பாஜகவின் வெற்றிக்காக அடிமட்ட அளவில் அண்ணாமலை பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறார் என்றும் கூறப்பட்டது. அண்மையில் பாஜக மாநில செயற்குழு கூட்டமும் கோவையில் நடைபெற்றது குறிப்பிடத்தகக்து.

போட்டியிட மாட்டேன் : இந்நிலையில் தான் தான் எம்.பி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அதிரடியாகத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை. கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே நான் பாஜகவிற்கு வந்திருக்கிறேன். கோவை தொகுதியில் நிற்பதற்கு கட்சியில் திறமையான பலர் இருக்கிறார்கள். அவர்களை வெற்றி பெறச் செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதே என் வேலை.

மாநிலத் தலைவராக, பாஜகவிற்கு எப்போதும் ஒரு தொண்டனாகவே பணியாற்ற நினைக்கிறேன். தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல விரும்பமில்லை. இந்த மண்ணிலேயே என் அரசியல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எந்த காரணத்திற்காகவும் டெல்லி அரசியலுக்குச் செல்ல எனக்கு விருப்பமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

No contest in mp election: Then what is Annamalais target?

டார்கெட் இதுதான் : இதன் மூலம், அண்ணாமலை டெல்லி அரசியல் வேண்டாம், தமிழ்நாட்டு அரசியலே தனது இலக்கு என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியைக் கொண்டு வரவே கட்சியில் இணைந்தேன் எனக் கூறியிருப்பதன் மூலம், அண்ணாமலையின் டார்கெட் 'முதலமைச்சர் நாற்காலி' தான் என்பதையும் போட்டு உடைத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

சமீபமாக பாஜகவில் ஏற்பட்ட ஏகப்பட்ட சலசலப்புகளால், அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி பறிக்கப்படும் என்றும் தேசிய அளவில் அவருக்கு பொறுப்பு கொடுக்கப்படலாம் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், அண்ணாமலையின் இன்றைய பேச்சு, அவர் தேசிய அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது.

இளம் வயதில் தமிழ்நாடு பாஜகவின் தலைவராகப் பொறுப்பேற்ற அண்ணாமலை, தமிழ்நாடு பாஜகவின் முகமாகவே தான் அறியப்பட வேண்டும் என்று நினைக்கிறார், தமிழ்நாட்டில் பாஜக எப்போதாவது ஆட்சிக்கு வந்தால் அது தனது தலைமையில் தான் இருக்கவேண்டும் என்று அண்ணாமலை கணக்குப் போடுகிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+