போகாதீங்க.. முதல்வர் பேசுறார்ல கேளுங்க.. மனித சங்கிலி போட்டு மக்களை தடுக்கும் அதிமுகவினர் - வீடியோ
முதல்வர் பழனிச்சாமியின் தேர்தல் பிரச்சாரத்தில் நடக்கும் காமெடியான சம்பவம் ஒன்று குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
Recommended Video

சென்னை: முதல்வர் பழனிச்சாமியின் தேர்தல் பிரச்சாரத்தில் நடக்கும் காமெடியான சம்பவம் ஒன்று குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
லோக்சபா தேர்தலுக்காக அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பாக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக நடத்தும் கூட்டங்களில் பொதுவாக மக்கள் கூட்டம் குறைவாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
முன்பெல்லாம் அதிமுகவிற்கு வருவது போல இப்போது கூட்டம் வருவதில்லை. மக்கள் பெரிய அளவில் இந்த கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.

படங்கள் வெளியானது
இந்த நிலையில்தான் தமிழக முதல்வர் செய்த பல பிரச்சாரங்களில் கூட்டம் இல்லை என்று புகைப்படங்கள் வெளியானது . சேலத்தில் முதல்வர் செய்த இந்த பிரச்சாரம் பெரிய வைரலானது. யாருமே இல்லாத சாலையில் முதல்வர் இப்படி பிரச்சாரம் செய்தது அதிமுகவினர் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்போது என்ன
இப்படி தொடர்ச்சியாக படங்கள் வெளியானது அதிமுக தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் தற்போது அதிமுக சார்பாக இதற்காக புதிய திட்டம் ஒன்றை போட்டு இருக்கிறார்கள். கூட்டம் குறையாமல் இருக்க அதிமுகவினர் மனித சங்கிலி அமைக்கும் திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள்.

எப்படி செய்கிறார்கள்
அதன்படி முதல்வர் பேசும் போது அங்கிருந்து வெளியேறும் மக்களை அதிமுகவினர் மனித சங்கிலி அமைத்து தடுக்கிறார்கள். மக்கள் எங்கும் செல்ல கூடாது, முதல்வர் பேசி முடிக்கும் வரை மக்கள் எங்கும் செல்ல கூடாது. மேலிடத்து உத்தரவு இதுதான், அதனால் பேச்சை இருந்து கேட்டுவிட்டு செல்லுங்கள் என்று அதிமுகவினர் மக்களிடம் கூறுகிறார்கள்.
|
பெரிய அதிர்ச்சி
இது தொடர்பாக வீடியோக்கள் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளியே செல்வதும், உட்கார்ந்து கேட்பதும் எங்கள் இஷ்டம். ஏன் அதிமுகவினர் இப்படி செய்கிறார்கள் என்று மக்கள் குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள்.
-
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications