“எடப்பாடி உடன் சேர்த்து வைத்தது பாஜக தான்.. எல்லாம் அமித் ஷா முயற்சியால் நடந்தது” - டிடிவி தினகரன்
சென்னை: எடப்பாடி பழனிசாமி உடனான மன வருத்தம் பங்காளி சண்டை போன்றது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தங்களை இணைத்து வைத்தது பாஜக தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
என்.டி.ஏ கூட்டணி மீது முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த வாரம் கூட ஒரு விமர்சனத்தை முன்வைத்தார். ஒரு காலத்தில் எடப்பாடி பழனிசாமியை டிடிவி தினகரன் எப்படியெல்லாம் கடுமையாக விமர்சித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதைப்போல அன்புமணி ராமதாஸ் கூட எடப்பாடி பழனிசாமியை கடுமையாக பேசியிருந்தார். ஆனால் தற்போது அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என விமர்சித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்நிலையில் தற்போது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நாங்கள் அமித் ஷா முயற்சியால் தான் ஒன்று சேர்ந்தோம் எனப் பேசியுள்ளார். ஒருகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் இருவருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வந்தது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார் டிடிவி தினகரன். ஆனால் தற்போது மீண்டும் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருக்கின்றனர்.
இதுகுறித்து திமுக கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தற்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக டிடிவி தினகரன், "எங்களுக்குள் இருந்த சண்டை அண்ணன் தம்பிகளுக்கு இடையே இருந்த சண்டை போல தான். அண்ணன் - தம்பி, மாமா - மச்சான், பங்காளி சண்டை போல தான் எங்களுடைய சண்டையும். எங்களை ஒன்று சேர்த்து வைத்தது பாஜக தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அமித் ஷா முயற்சியால் தான் நாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தோம். தற்போது அனைத்து அதிமுக தொண்டர்களும் ஒன்று சேர்ந்துவிட்டோம். இதெல்லாம் அமித் ஷா முயற்சியால் தான் நடந்தது" என பேசியுள்ளார் டிடிவி தினகரன்.
பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியின் பெயரையே குறிப்பிடவில்லையே, ஒருவேளை தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வராக பொறுப்பேற்பது யார்? எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அவர்கள் சொல்லவில்லையே என்பது போன்ற பல சர்ச்சைகள் இருந்தன. அப்போது டிடிவி தினகரன் தான் வெளிப்படையாக தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி, எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் எனக் கூறினார்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்!












Click it and Unblock the Notifications