மதம் சார்ந்த கட்டிடங்களுக்கு என்ஓசி தேவையில்லை.. கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் மேஜர் அறிவிப்பு
சென்னை: சென்னை பெரியமேட்டில் ரிப்பன் மாளிகையில் உள்ள விக்டோரியா அரங்கத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரிப்பன் மாளிகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட விக்டோரியா அரங்கம் பாரம்பரிய சின்னமாக விளங்கும் நிலையில் அதன் தொன்மை மாறாமல் ரூ.32.62 கோடியில் புனரமைக்கப்பட்டது விக்டோரியா அரங்கம்.
முன்னதாக சென்னை பெரம்பூரில் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்று கேக் வெட்டி கிறிஸ்துவ, இஸ்லாமிய, இந்து உள்ளிட்ட பல்வேறு சமயத்தைச் சார்ந்தவர்களுக்கு வழங்கிய ஸ்டாலின், ஒன்று சேர்ந்து, மக்களும் ஆதரவாக இருக்கும்போது எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது.. திமுக துணையாக இருக்கும் என்று பேசினார். மேலும் மதம் சார்ந்த கட்டிடங்களுக்கு இனி என்ஓசி தேவையில்லை என்ற மேஜர் அறிவிப்பையும் ஸ்டாலின் வெளியிட்டார்.

கிறிஸ்துமஸ் பெரு விழா
சென்னை பெரம்பூர், தொன்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, கிறிஸ்துவ, இஸ்லாமிய, இந்து உள்ளிட்ட பல்வேறு சமயத்தைச் சார்ந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அப்போது பேசிய ஸ்டாலின் கூறியதாவது:-
எங்கும் அன்பு நிறைந்திடவும் - சகோதரத்துவம் தழைத்திடவும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிக்கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
கிறிஸ்துமஸ் என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய நாள்! அன்பை பரிமாறிக்கொள்ளும் நாள்! அப்படிப்பட்ட இந்த திருநாள் கொண்டாட்டத்தில் 3250 குடும்பங்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்கியிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது! இந்த நான்கரை ஆண்டுகளில் 3 ஆயிரத்து 927 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
புதிய விடுதிகள்
உங்களுக்காக நமது அரசின் மூலமாக நாம் உருவாக்கியிருக்கும் திட்டங்களை நான் பல்வேறு மேடைகளில் பட்டியலிட்டு சொல்லிக்கொண்டு இருக்கிறேன். சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும். உங்களின் வாழ்க்கையில் ஒளி நிலைபெற வேண்டும் என்று பார்த்துப் பார்த்து திட்டங்களை செய்துகொண்டு இருக்கிறோம்! அதில் சிலவற்றை மட்டும் இங்கு Highlight-ஆக சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன்.
* சிறுபான்மையின கல்லூரி மாணவர் நலன் கருதி சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் 130 மாணவர்கள் பயனடையும் அளவிற்கு, புதிய விடுதிகளை தொடங்கியிருக்கிறோம்!
* கிராமப்புற மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்க வேண்டும் என்று இதுவரைக்கும் ஒரு இலட்சத்து 3 ஆயிரம் மாணவிகளுக்கு 6 கோடியே 57 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை.
வெளிநாடுகளில் உயர்கல்வி பயில சிறப்பான திட்டம்
* 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும், 90 ஆயிரத்து 723 மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை.
* சிறுபான்மையினரால் நடத்தப்படும் 456 கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்கியிருக்கிறோம்!
* பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின முன்னேற்றம் பெண்கள் அடைவதற்காக ஆறாயிரம் பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கியிருக்கிறோம்!
* தமிழ்நாட்டில் இருக்கும் கிறிஸ்துவ மக்கள், ஜெருசலேமிற்கு புனித பயணம் செய்வதற்கான மானியத்தை, 37 ஆயிரம் ரூபாயாகவும் கன்னியாஸ்த்ரிகளுக்கு, 60 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தியிருக்கிறோம்!
* 2 கோடியே 87 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 44 தேவாலயங்களை புனரமைத்திருக்கிறோம்!
* சென்னை மாவட்டத்தில் வெஸ்லி தேவாலயத்தை ஒரு கோடியே 19 இலட்சம் ரூபாயில் புனரமைத்திருக்கிறோம்!
* புனித தோமையர் மலை தேவாலயத்தை, ஒரு கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைத்துகொண்டு இருக்கிறோம்!
மதம் சார்ந்த கட்டிடங்களுக்கு என்ஓசி தேவையில்லை
* சென்னையில் இருக்கும் உங்களுக்கு, கல்லறைத் தோட்டங்களில் நிலவிய பிரச்சினைகள் பற்றி நன்றாக தெரியும். அதனால்தான், நம்முடைய அரசில், கிறித்துவர்களுக்கான அடக்கஸ்தலங்கள் அமைக்க புதிய நிலம் கையகப்படுத்தவும் சென்னையில் ஏற்கனவே இருக்கும் அடக்கஸ்தலங்களில் மீண்டும் அடக்கம் செய்வதற்கு இருந்த நிபந்தனைகளையும் தளர்த்தியிருக்கிறோம்! அதுமட்டுமல்ல. 19 கல்லறைத் தோட்டங்களை புனரமைத்திருக்கிறோம்!
* திருநெல்வேலி - தேனி - இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கல்லறை தோட்டங்களுக்கு சுற்றுச்சுவர் அமைக்க 5 கோடி ரூபாய் நிதியை விடுவித்திருக்கிறோம்! இப்படி, என்னால் பல மணிநேரத்திற்கு List போட்டு சொல்லிகொண்டே போக முடியும்! அந்தளவிற்கு செய்திருக்கிறோம்! இன்னுமும் செய்வோம்! செய்வோம்! செய்வோம்!
* 2019 முதல் 2024 வரை செயல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த மற்றும் கட்டிட விதிமுறைகள் வளர்ச்சி 2019-இன் படி உள்ள மதச்சார்பான கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் NOC-யை வலியுறுத்தாமல் திட்ட அனுமதி வழங்கப்படும். இந்த காலத்தில் திட்ட அனுமதி வேண்டி விண்ணப்பித்திருக்கும் மதச்சார்பான கட்டிடங்களுக்கும் இது பொருந்தும்.
எந்த பாசிச சக்திகளாலும்
இனிகோவின் கோரிக்கைகள் இனி இல்லை என சொல்லக்கூடிய அளவிற்கு அறிவிப்புகள் செய்துவிட்டேன். அதனால், நீங்கள் எப்போதும்போல், நம்முடைய அரசின் சாதனை திட்டங்களை, நீங்கள் எல்லோரும் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்று, நமக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்று அன்போடு நான் உங்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
* நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் அனைவரும், இன்றைக்கு என்ன மாதிரியான அச்ச உணர்வோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை! இந்த நாட்டின் குடிமக்களுக்கே அச்சத்தை வரவைக்கும் எதேச்சாதிகார சக்திகளை எதிர்க்கும் திறனும் கொள்கையும் - உணர்வும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குதான் இருக்கிறது!
ஒன்று சேர்ந்து, மக்களும் ஆதரவாக இருக்கும்போது, எந்த பாசிச சக்திகளாலும், ஒன்றும் செய்ய முடியாது! உங்களுக்குத் துணையாக திராவிட முன்னேற்றக் கழகமும் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும் உறுதியாக இருக்கும்!
அதேபோல், என்றைக்கும் நீங்கள் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விக்டோரியா அரங்கம்
தொடர்ந்து சென்னை பெரியமேட்டில் ரிப்பன் மாளிகையில் உள்ள விக்டோரியா அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரிப்பன் மாளிகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட விக்டோரியா அரங்கம் பாரம்பரிய சின்னமாக விளங்கும் நிலையில் அதன் தொன்மை மாறாமல் ரூ.32.62 கோடியில் புனரமைக்கப்பட்டது விக்டோரியா அரங்கம்.
-
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது











Click it and Unblock the Notifications