குறுநில மன்னர்கள் உருவாக முடியாது.. திமுகவில் நடந்த மாற்றமே இதுதான்.. பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது எவ்வளவு எளிதாக இருக்காது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியுள்ளார். அமைப்பு ரீதியாக 45 ஆண்டுகளில் செய்யாத மாற்றத்தை திமுக செய்திருப்பதாக கூறிய தராசு ஷ்யாம், குறுநில மன்னர் மனப்பான்மையை உடைக்க திமுக களமிறங்கிவிட்டதாகவும் கணித்துள்ளார்.

திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 110ஆக உயர்த்தப்பட உள்ளதோடு, சீனியர்கள் பலருக்கும் அதிர்ச்சி கொடுக்க அறிவாலயம் தயாராகிவிட்டது. 2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று அறிவிக்கப்பட்டுவிட்டதால், திமுகவில் பவர் செண்டர் என்ற கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

Tharasu Shyam

இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், திமுகவில் 45 ஆண்டுகளுக்கு முன் இளைஞரணி தொடங்கப்பட்டது. அப்போது இளைஞரணி ஏன் என்று நாங்கள் நினைத்தோம். அப்போது மாவட்ட ஆட்சியர் போல் மாவட்டத்திற்கு ஒரு செயலாளரை திமுக வைத்து கொண்டது. அண்ணா, கலைஞருக்கு நிகராக மாவட்டச் செயலாளர்கள் செல்வாக்கு பெற்றிருந்தார்கள்.

தற்போது மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. எதிர்கால சிக்கல்கள், தேசிய அளவிலான மாற்றங்களை உள்வாங்கி அமைப்பு ரீதியாக மாற்றத்தை திமுக கொண்டு வந்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் அமைப்பு ரீதியாக மாற்றம் செய்திருப்பது இதுவே முதல்முறையாகும். தற்போது ஒவ்வொரு தனி நபருடனும் பேச வேண்டிய சூழலில் தான் அரசியல் இருக்கிறது.

அதனால் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரிப்பது நியாயமானது தான். பூத் கமிட்டி போல் கொஞ்சம் பெரியளவில் செய்திருக்கிறார்கள். செல்ஃபோன் தொடர்பு மொழிக்கான சாதகனமாக மாறிவிட்டது. அதனால் இனி டிஜிட்டல் ரீதியாக அரசியல் செயல்பாடுகள் அதிகமாக இருக்கும். நிச்சயமாக இதன் தொடக்க நிலையில் சில பிரச்சனைகளில் சிக்கும்.

ஆனால் அதனை கடந்து திமுக வந்துவிடும். அதற்கு காலம் துணையாக இருக்கும். கட்சிக்குள் கசப்பு இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் அவசியமாக இருக்கிறது. மாவட்ட செயலாளர் வயதை 70 என்பதே அதிகம் தான். வரும் காலங்களில் அதனை 60ஆக குறைக்க வேண்டும். குறுநில மன்னர் மனப்பான்மையை சீர் செய்யும் நடவடிக்கையை திமுக தொடங்கி இருக்கிறது.

ஆளுங்கட்சியாக இருக்கும் போது சீர் செய்வது கடினம். எதிர்க்கட்சியாக இருக்கும் போது நிச்சயமாக செய்துவிட முடியும். அரசியலை பொழுதுபோக்காக பார்க்க தொடங்கி இருக்கிறார்கள் இளைஞர்கள்.. அதற்கேற்ப ஒரு தொடர்பு மொழியை உருவாக்க வேண்டும். அதனால் திமுக மாற்றம் செய்ய வேண்டியது அத்தியாசியம் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+