10 லட்சம் வரை கடனுக்கு எந்த கேரண்டியும் கேட்க கூடாது.. வந்தாச்சு கடிவாளம்! தமிழக அரசு கிடுக்கிப்பிடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ.10 லட்சம் வரை கடனுக்கு இனி எந்த கேரண்டியும் கேட்கக் கூடாது என்று கடன் நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் வகையில் ஒரு அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது தனியார் கடன் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ரூ.10 லட்சம் வரையிலான கடன்களுக்கு எந்த உத்தரவாதமும் கேட்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திடீர் பண நெருக்கடி ஏற்படும் நேரங்களில் வங்கிகளில் கடன் பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அவர்கள் கேட்கும் ஆவணங்கள், விதிகளை பின்பற்றி கடனை வாங்குவதற்கு படாதபாடு பட வேண்டியிருக்கிறது என்பதால், மக்கள் தனியார் நிதி நிறுவனங்களை அதிகம் நாடி செல்வதை பார்க்க முடிகிறது.

no-guarantee-should-be-asked-for-loans-up-to-rs-10-lakh-tn-govt-new-restrictions-for-private-lendin

அடாவடி வசூல், வட்டி சுரண்டல்

ஆனால், தனியார் நிறுவனங்கள் காட்டும் கெடுபிடியோ அதை விட மோசமாக உள்ளது. தனியார் நிறுவனங்களின் அடாவடி வசூல், வட்டி சுரண்டல், மக்கள் மீதான அச்சுறுத்தல் போன்றவற்றை முற்றிலும் தடுத்து நிறுத்த ஏற்கனவே புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்து இருக்கிறது. கடன் வசூல் என்ற பெயரில், பொதுமக்களை மிரட்டுவோர் மீதும், அவர்களின் சொத்துகளை அபகரிக்க முயல்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

தமிழக அரசின் புதிய விதிகள்

ஆனாலும், தனியார் நிதி நிறுவனங்க்ளின் அடாவடிகள் குறைந்தபாடில்லை என்று மக்கள் புலம்பும் நிலைதான் உள்ளது. இந்த சூழலில்தான், தமிழக அரசு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிகளிள் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் தனிநபர் அல்லது நிறுவனம் கடன் வழங்க வேண்டும் என்றால், அரசு ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்து இருப்பது அவசியம். பதிவுக்கட்டணமாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். நிறுவனங்களின் முழு விவரம் இடம் பெற்று இருக்க வேண்டும்.

இதில் அளிக்கப்பட்ட தகவல்கள் பொய்யாக இருந்தால் உடனடியாக பதிவு ரத்து ஆகும். புதிய விண்ணப்பம் சமர்பிக்கப்படும் போது காவல்துறை, வருவாய்துறை, குற்றப்பதிவு துறை ஆகியவை இணைந்து நிறுவனத்தின் முழு விவரங்கள் பின்னணி பற்றி சரிபாப்பார்கள்.

ரூ.10 லட்சம் வரை

* விண்ணப்ப பதிவு செய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் சான்றிதழ் வழங்கப்படும். காலக்கெடு முடிந்தால், பதிவு சான்றிதழ் தானாக வழங்கப்படும். இந்த கடன் நிறுவனங்கள், வீட்டு குடும்ப தேவைக்காக வழங்கும் கடன்கள் ரூ. 4 லட்சம் வரையிலான தொகைக்கு எந்த கேரண்டி (உத்தரவாதம்) கேட்க கூடாது. சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரை ஜாமீன் அல்லது அடமானம் எதுவும் கேட்க கூடாது.

புகார் தீர்க்கும் தீர்ப்பாயம்

* அதேபோல, கடன் பெறுபவர்கள், கடனை அடைத்த 30 நாட்களுக்குள் அவர்களிடம் பெறப்பட்ட ஆவணங்களை நிறுவனங்கள் திருப்பி அளிக்க வேண்டும். கடன் நிறுவனங்களின் தவறான வசூல் நடவடிக்கைகளை கண்காணிக்க புகார் தீர்க்கும் தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

* இந்த தீர்ப்பாயம், கடனாளிகள் மீது நிகழும் அச்சுறுத்தல், அதிக வட்டி, அடாவடி வசூல் போன்ற புகார்களை விசாரிக்கும். இருதரப்பினரையும் அழைத்து பேசி நடுவர் போல தீர்வு வழங்கும். தேவையானால் காவல்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+