சிவகங்கைக்கு மீண்டும் கார்த்தி வந்தால்.. ரொம்ப சிரமமா இருக்கும் போலயே.. பெரிய புள்ளியை இறக்கிய பாஜக
சிவகங்கை: சிவகங்கையில் பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டி போடுவதற்கான அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் கார்த்திக் சிதம்பரத்தை களமிறக்கும் பட்சத்தில் போட்டி மிகக் கடுமையானதாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுக்கான பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இது தேசிய அளவில் பாஜகவின் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் ஆகும்.
தென்சென்னை - தமிழிசை
மத்திய சென்னை - வினோஜ் செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)
கிருஷ்ணகிரி - நரசிம்மன்
நீலகிரி - எல்.முருகன்
கோவை - அண்ணாமலை
பெரம்பலூர் - பாரிவேந்தர் (இ.ஜ.க)_
நெல்லை- நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்

இன்று மீதம் உள்ள தொகுதிகளுக்கான பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்
1) திருவள்ளூர் - பாலகணபதி
2) வட சென்னை - பால் கனகராஜ்
3) திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்
4) நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்
5) திருப்பூர் - முருகானந்தம்
6) பொள்ளாச்சி - வசந்தராஜன்
7) கரூர் - செந்தில்நாதன்
8) சிதம்பரம் - கார்த்தியாயினி
9) நாகை - எஸ்.ஜி.எம்.ரமேஷ்
10) தஞ்சை - எம்.முருகானந்தம்
11) சிவகங்கை - தேவநாதன் யாதவ்
12) மதுரை - ராம சீனிவாசன்
13) விருதுநகர் - ராதிகா சரத்குமார்
14) தென்காசி - ஜான் பாண்டியன்
15) புதுச்சேரி - நமச்சிவாயம்
சிவகங்கை வேட்பாளர்; இதில் சிவகங்கையில் பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டி போடுவதற்கான அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் கார்த்திக் சிதம்பரத்தை களமிறக்கும் பட்சத்தில் போட்டி மிகக் கடுமையானதாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இவர் 2016ல் திருவாடானை தொகுதியில் அதிமுகவின் கருணாஸை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 11,842 வாக்குகள் மட்டுமே பெற்று இவர் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் தற்போது சிவகங்கையில் பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் அறிவிக்கப்பட்டு உள்ளார். கடந்த முறை சிவகங்கையில் 566,104 வாக்குகள் பெற்று கார்த்தி சிதம்பரம் வென்றார். இவரை எதிர்த்து பாஜகவின் எச் ராஜா போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
எச் . ராஜாவிற்கு இங்கே 2,33,860 வாக்குகள் கிடைத்தன. அமமுக வேட்பாளர் பாண்டி 1,22,534 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த முறை எச். ராஜாவிற்கு பதிலாக தேவநாதன் யாதவ் இங்கே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் கார்த்திக் சிதம்பரத்தை களமிறக்கும் பட்சத்தில் போட்டி மிகக் கடுமையானதாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இங்கே அதிமுக சார்பாக சேவியர் தாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
தேர்தல் தேதி: லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த வாரம் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.












Click it and Unblock the Notifications