இனி தமிழகத்தில் மாவட்டங்களை பிரிக்கும் எண்ணம் இல்லை.. முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!
இனி தமிழகத்தில் மாவட்டங்களை பிரிக்கும் எண்ணம் இல்லை, என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: இனி தமிழகத்தில் மாவட்டங்களை பிரிக்கும் எண்ணம் இல்லை, என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வளர்ச்சி மற்றும் தொகுதி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு புதிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. சமீபத்தில் மயிலாடுதுறை, தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை என நிறைய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது.
இதையடுத்து மேலும் கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளது.

என்ன பேட்டி
இது தொடர்பாக ஈரோட்டில் தமிழக முதல்வர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவையான உபகரணங்கள் கையிருப்பிலுள்ளது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு இதில் சிறப்பான தடுப்பு பணிகளை செய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 2 அரசு கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

ஈரோடு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் 4480 கூடுதல் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஈரோடு கீழ் பவானி திட்டத்தின் மூலம் கடைமடை விவசாயிகள் வரை நீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் விவசாயிகள் அதிக பலன்களை அடைவார்கள். அதேபோல் ஈரோட்டில்கால்வாய் சீரமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்டம் வேகம் எடுத்துள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்டம் 30% நிறைவு பெற்றுள்ளது.

மாவட்ட பிரிப்பு இல்லை
அத்திக்கடவு அவினாசி திட்டம் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். கொரோனா தடுப்பு தொடர்பாக வீடு, வீடாக அறிவுரை வழங்கி வருகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதனால் கேஸ்கள் வரும் நாட்களில் குறையும்.

மாவட்ட பிரிப்பு
மாவட்ட பிரிப்பு மூலம் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது. தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது. இனி தமிழகத்தில் மாவட்டங்களை பிரிக்கும் எண்ணம் இல்லை, என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications