"அசையா சொத்துக்கள் எதுவும் கிடையாது.." உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அறிக்கை
சென்னை: அமலாக்கத்துறை ட்விட்டர் பக்கத்தில் வெளிவந்த பதிவு சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தவறாக சித்தரிக்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு அசையா சொத்துக்கள் எதுவும் கிடையாது என்று அவரது அறக்கட்டளை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது என்று அவரது அறக்கட்டளை தரப்பில் அறிவிக்கை வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறக்கட்டளையின் அறங்காவலர் பாபு என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:-
"அமலாக்கத்துறை டுவிட்டர் பக்கத்தில் வெளிவந்த பதிவு சமூக வலைத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தவறாக சித்தரிக்கப்படுகிறது. அமலாக்கத்துறை முடக்கிய 34.75 லட்சத்திற்கு தகுந்த ஆவணங்களை கொடுத்து சட்டப்படி மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. முழுக்க முழுக்க மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை களப்பணியாற்றுகிறது.
2012 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. அறக்கட்டளை பதிவு செய்யப்பட்ட நாள் முதல் கல்வி, மருத்துவ உதவிகள் போன்ற பல்வேறு மக்கள் நல பணிகளை செய்து வருகிறது. அறக்கட்டளை பெற்றுள்ள நன்கொடைகளின் விவரங்களையும் வரவு செலவு கணக்குகளையும் முறையாக வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்து வருகிறோம்.
அறக்கட்டளைக்கு எந்த வித அசையா சொத்தும் கிடையது. அமலாக்க்துறை ட்விட்டரில் கூறப்பட்டுள்ள 36 கோடி சொத்து முடக்கத்திற்கும் உதய நிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அறக்கட்டளை என்றும் அறத்தின் வழி மட்டுமே நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications