இன்டர்நெட் இல்லாமலே செல்போன்களில் லைவ் வீடியோ பார்க்கலாம்! விரைவில் வரும் வசதி.. எப்படி இயங்கும்
சென்னை: இந்தியாவில் டைரக்ட் டூ மொபைல் தொழில் நுட்பம் விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இன்டர்நெட் இல்லாமலேயே மொபைல் போன் பயனாளர்கள் செல்போனில் வீடியோக்கள், நேரலையில் ஒளிபரப்பாகும் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பார்க்க முடியும். பட்டன் செல்போன்களில் கூட லைவ் வீடியோக்களை பார்க்க முடியும். இந்த தொழில் நுட்பத்திற்கான ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் பெங்களூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வருகிறதாம்.
தற்போதைய டிஜிட்டல் உலகில் செல்போன்கள் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துவிட்டது. உள்ளங்கைக்குள் உலகம் என்ற வார்த்தையை உண்மையாக்கும் வகையில் செல்போன் இருந்தால் போதும், உலகின் எந்த மூலையில் இருப்பவர்களுடன் பேசலாம். என்ன தகவல் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள முடியும். இணையவசதி இதற்கு மிக முக்கியமாக அமைந்துள்ளது.

செல்போனிலேயே லைவ் டிவி
செல்போன்களை பொறுத்தவரை ஆரம்ப காலங்களில் வெறும் தொலைபேசி அழைப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இணைய பயன்பாடு அதிகரித்த பிறகு செல்போன்களில் வீடியோ பார்ப்பது, வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவது என மக்களின் பிரதான பொழுதுபோக்கு சாதனமாக செல்போன்கள் மாறிவிட்டன.
டிவி பார்க்கும் பழக்கம் கூட பலருக்கும் குறைந்துவிட்டது என சொல்லும் அளவிற்கு ஸ்மார்ட் போன்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. புதிதாக திரைக்கும் வரும் திரைப்படங்கள் முதல் கிரிக்கெட் உள்ளிட்ட லைவ் டெலிகாஸ்ட்கள் வரை செல்போன்களிலே தற்போது பார்த்துவிட முடிகிறது. ஆனால் இவை அனைத்திற்கு உயிர்மூச்சாக இருப்பது இணையவசதிதான்.
இன்டர்நெட் இல்லாமலேயே
இதனால், இணைய வசதி அதிகம் இல்லாத இடங்களுக்கு செல்லும் போது, செல்போன்களில் வீடியோக்கள், பொழுதுபோக்கு சேனல்கள் உள்ளிட்டவற்றை பார்க்க முடியாத சூழல் இருக்கிறது. அப்போது எல்லாம், இணையவசதியே இல்லாமல் நேரடியாக இதுபோன்ற லைவ் ஸ்ட்ரீமிங்கில் சேனல்கள் ஓடினால் என நினைத்து பார்த்து இருப்பார்கள். ஆனால் இது உண்மையிலேயே இப்படியான ஒரு நிகழ்வு நடக்கப்போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இணையவசதி இல்லாத பட்டன் போன்களில்கூட லைவ் டிவி வீடியோக்களை பார்க்கும் வசதி விரைவில் வர உள்ளதாம். (D2M) என்ற தொழில் நுட்பம் மூலம் இந்த வசதி சாத்தியம் ஆகும் என்கிறார்கள் அத்துறை வல்லுனர்கள். செயற்கைகோள் மற்றும் பிராட்காஸ்ட் டவர்களின் மூலமாக லைவ் கண்டெண்ட்கள் மொபைலில் ஓடும். எப்.எம் சேனல்கள் எப்படி நேரலையாக கேட்கிறதோ அதேபோல, இணையவசதியின்றி வீடியோக்களும் பார்க்க முடியும்.
குக் கிராமங்களில் கூட
ரூ.1,000 முதல் 2 ஆயிரம் விலையில் விற்க கூடிய செல்போன்களில் கூட இவற்றை பார்க்க முடியுமாம். இணையவசதி அதிகம் இருக்காத குக்கிராமங்களில் உள்ளவர்கள் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள், லைவ் விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். மொபைல் நெட்வொர்க் வசதி போன்று இல்லாமல் எவ்வளவு பேர் பார்த்தாலும் இது முடங்காது.
பட்டன் செல்போன்களிலும் பார்க்க முடியும்
பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனங்களான லாவா மற்றும் ஹெச்.எம்.டி ஆகியவை மேற்கூறிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் ரூ.2 ஆயிரம் முதல் 2,500 ரூபாய் வரம்புக்குள் புதிய சாதனங்களை தயாரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கான சிப்செட்ஸ்களை டாடா குழுமத்தை சேர்ந்த சான்க்யா லேப்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
துவக்கத்தில் மத்திய அரசின் பிரசார் பாரதி (தூர்தர்ஷன) சேனல்கள் இந்த கருவிகளில் லைவ் ஆக பார்க்க முடியும் வகையில் கொண்டு வரப்படும் என சொல்லப்படுகிறது. அதேபோல, D2M திறனுடன் ஸ்மார்ட்போன்களும் தயாரிக்க திட்டமிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த வசதி மட்டும் செயல்பாட்டுக்கு வந்தால், ஸ்மார்ட்போன்களில் இணையவசதி இல்லாமலே லைவ் சேனல்களை பார்க்க முடியும்.
எப்படி செயல்படுகிறது?
எப் எம் ரேடியோவில் எப்படி சிக்னல்கள் ரிசிவராக மாற்றப்படுகிறதோ அதேமாதிரியான தொழில் நுட்பத்துடன் இது செயல்படும். எளிதாக சொல்வது என்றால் டிடிஎச் சேவை இயங்குவது போலத்தான். இதற்கான சோதனைகள் டெல்லி மற்றும் பெங்களூரில் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், அடுத்த 9 மாதங்களில் மேலும் சில சோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
24 க்கும் மேற்பட்ட நகரங்களில் சோதனை மேற்கொண்ட பிறகு இந்த வசதி செயல்பாட்டுக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில் இணையசேவைக்கான கட்டணம் மூலம் பெருமளவு வருவாய் பார்க்கும் டெலிகாம் நிறுவனங்கள் இதற்கு முட்டுக்கட்டை போடலாம் என்றும் சொல்லப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications