Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லா "கன்ட்ரோலும்" அவரிடம்தான்.. சீக்ரெட்டை உடைத்த ஐபேக்..திமுகவிற்குள் நடப்பது என்ன? முழு பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தயாரித்த வேட்பாளர் பட்டியலை பார்த்து ஐபேக் பிரஷாந்த் கிஷோர் கோபப்பட்டததாகவும், இந்த லிஸ்ட்டை ஐ பேக் விரும்பவில்லை என்றும் நிறைய செய்திகள் வெளியான நிலையில் உண்மையில் திமுகவிற்குள் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

திமுகவிற்கு தேர்தல் பிரசார யுக்திகளை உருவாக்குவுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் நிறுவனம்தான் ஐ பேக். முதலில் சர்வே மற்றும் டேக்லைன் பிரசாரங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே ஐ பேக் வரவழைக்கப்பட்டது.

அதன்பின் தேர்தலில் வெற்றிபெற்றுத்தருவோம் என்று பிரஷாந்த் கிஷோர் உறுதி அளித்ததால் மொத்தமாக பிரசார திட்டங்கள் ஐபேக் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இதன்பின் நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானது.

 என்ன செய்தி

என்ன செய்தி

பல்வேறு ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளின்படி.. திமுகவை ஐபேக் கட்டுப்படுத்த பார்த்தது . முக்கியமாக திமுகவின் வேட்பாளர் தேர்வில் ஐபேக் மூக்கை நுழைத்தது. திமுகவின் உச்சியில் நின்று கொண்டு ஐபேக் ஆட்டம் போடுகிறது. ஐபேக் தங்களுக்கு காசு கொடுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்து.. திமுகவிடம் லிஸ்ட் கொடுத்தது என்றெல்லாம் புகார் வைக்கப்பட்டது.

சண்டை

சண்டை

திமுக மாவட்ட செயலர்களை ஐபேக் மதிப்பது இல்லை. பிரஷாந்த் கிஷோர் - திமுக இடையே மோதல் உள்ளது.அதோடு ஐபேக் கொடுத்த லிஸ்டில் சிலரை தேர்வு செய்யாததால் பிரசாந்த் கிஷோர் ஸ்டாலினிடம் கோபம் அடைந்தார். திமுக வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்று பிகே கைவிரித்துவிட்டார் என்றெல்லாம் கூறப்பட்டது.

ஆனால் உண்மை என்ன

ஆனால் உண்மை என்ன

ஒரு பிரசார யுக்தியை வகுக்கும் ஸ்ட்ராடஜி நிறுவனத்திற்கும் பெரிய கட்சிக்கும் இப்படி எல்லாம் மோதல் நடக்க வாய்ப்பு உள்ளதா என்று சந்தேகம் வந்த நிலையில் ஐபேக்கில் முக்கிய பொறுப்புகளை மேற்பார்வையிடும் நிர்வாகிகளிடமே போனை போட்டு விசாரித்தோம்.. அவர்களின் கூற்றபடி.. ஐபேக் - திமுக இடையே மோதல், கருத்து வேறுபாடு என்று வெளியாகும் செய்தி எதிலுமே உண்மை இல்லையாம்.

மாவட்ட செயலாளர்கள்

மாவட்ட செயலாளர்கள்

உண்மையில் சொல்லப்போனால் இப்போதும் திமுகவில் மாவட்ட செயலாளர்கள்தான் உத்தரவுகளை போடுகிறார்கள். நாங்கள் திட்டங்களை மட்டுமே வாங்குகிறோம். நாங்கள் வேட்பாளர் லிஸ்ட்டை தயார் செய்து கொடுத்தது உண்மைதான். அதில் 98% வேட்பாளர்களை ஸ்டாலின் டிக் அடித்துவிட்டார். இதில் எல்லாம் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை.

வாதம்

வாதம்

சில இடங்களில் திட்டங்களை செயல்படுத்துவது எப்படி என்று விவாதம் நடக்கும்.. அவ்வளவுதான். அது எல்லா கட்சியிலும் நடக்க கூடியதுதான். திமுகவின் வேட்பாளர் பட்டியலை பலரும் பாராட்டுகிறார்கள். இதற்கு திமுக - ஐ பேக் இணைந்து பணியாற்றியதுதான் காரணம். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் ஐபேக் தான் ஒப்பந்தம் செய்துள்ள கட்சியோடு மிக நெருக்கமாகவே உள்ளது, என்கிறார்கள்.

நெருக்கடி

நெருக்கடி

அதோடு திமுகவிற்கு ஐபேக் நெருக்கடி கொடுக்கிறது என்று வெளியான செய்தியெல்லாம் பொய். திமுகவில் எல்லா முடிவுகளையும் ஸ்டாலின்தான் எடுக்கிறார். ஸ்டாலின் எடுப்பதே இறுதி முடிவு என்று பிகே பல இடங்களில் நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டார்.. உங்கள் வேலை ஆலோசனை சொல்வது, முடிவு எடுப்பது ஸ்டாலின் கையில் என்பதுதான் பிகேவின் நிலைப்பாடு என்கிறார்கள்.

உதயநிதி

உதயநிதி

திமுகவிற்கு ஆலோசனை மட்டுமே வழங்குகிறோம்.. மாவட்ட செயலாளர்கள்தான் இப்போது கிங்காக உள்ளனர். அதோடு உதயநிதி தேர்வை பிகே எதிர்க்கவில்லை.. குறிப்பாக சொல்லப்போனால் உதயநிதி - ஐபேக் மிகவும் நெருக்கமாவே இருக்கிறார்கள் . ஒன்றினைவோம் வா திட்டமே இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கியதுதான். உதயநிதியுடன் இணைந்து ஐபேக் பல திட்டங்களை வகுத்து வருகிறது.

வாக்கு

வாக்கு

உதயநிதியை ஐபேக் எதிர்பதாக வெளியாகும் செய்தியில் எல்லாம் உண்மை இல்லை என்கிறார்கள் ஐபேக் நிர்வாகிகள். நிலைமை இப்படி இருக்க தேர்தலில் வெற்றிபெற்றால் பிகேவிற்கு பெரிய பரிசு ஒன்றை திமுக வழங்க உள்ளதாகவும். சில மாவட்ட செயலாளர்களே இதை பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.. இப்போது வரை திமுக - ஐபேக் இடையே எல்லாம் ஆல் இஸ் வெல்தான்.. பிரச்சனை எதுவும் இல்லை என்றே கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+