எந்த நடிகரும் வரல! வீடே வெறிச்சோடி கிடக்கு.. மதன் பாப் வீட்டு முன் நின்று ஆதங்கத்தை கொட்டிய ரசிகர்
சென்னை: நகைச்சுவை நடிகர் மதன் பாப் (Madan Bab passes away) நேற்று காலமானார். சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரசிகர் ஒருவர், இறந்த மதன் பாப் வீட்டை பார்த்தீங்கன்னா வெறிச்சோடிப் போய் கிடக்கிறது என்றும் எந்த நடிகரும் வரவில்லை என்றும் கூறியுள்ளார். அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி டீமில் இருந்தவர்கள் கூட வராமல் இருப்பது மனதுக்கு சங்கடமாக இருப்பதாக கூறியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் மதன் பாப் நேற்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் உயிரிழந்த மதன் பாப்பின் உடல் திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

மதன் பாப் மறைவால் ரசிகர்கள், நடிகர்கள், சினிமா திரைப்பிரபலங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ரசிகர்களும் கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவருடன் பணியாற்றியவர்கள் பலரும் மதன் பாப் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மதன் பாப் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரசிகர் ஒருவர், வீடே வெறிச்சோடி கிடக்கிறது என்றும், எந்தவித நடிகர்களும் வரவில்லை. அசத்தப்போவது யாரு டீமில் இருந்த எந்த ஒரு மனிதர்களும் வராதது சங்கடமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
மறைந்த நகைச்சுவை நடிகர் மதன் பாப், நகைச்சுவை கலைஞராகவும், நகைச்சுவை மனிதனாகவும் வாழ்ந்தவர். முழுக்க முழுக்க எல்லாரையும் சிரிக்க வைக்க வேண்டும் என நினைத்தவர். தான் மட்டுமின்றி தன்னை சுற்றி உள்ள மற்றவர்களையும் சிரிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து வாழ்ந்த ஒரே மனிதர் மதன் பாப் தான்..
அவர் இருக்கும் போது எல்லா திரைப்படங்களிலும் பார்த்தோம் என்றால், எல்லா காட்சியிலும் சிரிப்பார்.. சிரிக்காமல் அவர் இருந்த காட்சிகளே இல்லை என்று சொல்லலாம். இன்னைக்கு ஒட்டு மொத்த தமிழ் சினிவாவும், சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர்களுக்கும் கண்ணீர் துளியை பரிசாக கொடுத்துவிட்டு விண்ணுக்கு சென்றுவிட்டார். அவரது இழப்பு பேரிழப்பு..
ஆனால் அதையும் தாண்டி மனது ஒரு விஷயம் வேதனை அளிக்கிறது. அவரது வீடு வெறிச்சோடி போய் கிடக்கு. எந்தவித நடிகர்களும் வரவில்லை. அசத்தப்போவது யாரு டீமில் இருந்த எந்த ஒரு மனிதர்களும் வரல.. இது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. நல்ல காரியத்துக்கு முன்னாடி நிற்பதைவிட, இந்த மாதிரி விஷயத்துக்கு முன்னால் வந்து நின்றால் அவரது ஆத்மா சாந்தியடையும்.. என்று ரசிகர் ஒருவர் கூறினார்.
நடிகர்கள் அஞ்சலி
முன்னதாக மறைந்த நடிகர் மதன் பாப் உடலுக்கு பிரபல இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதேபோல் இயக்குனரும், நடிகருமான கே பாக்யராஜ், மனைவி பூர்ணிமாவோடு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நகைச்சுவை நடிகர் தாமு, இயக்குனர் விக்ரமன், நடிகர் நாசர், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எஸ்வி சேகர் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
நகைச்சுவை நடிகர் மதன் பாப், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்யின் பூவே உனக்காக படத்தில் நடித்திருந்தார். இதேபோன்று ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் இவரது நகைச்சுவை காட்சி ரசிகர்கள் மனதில் இன்று நீங்கா இடம் பிடித்திருக்கும்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications