30க்கு கீழே பேச்சே கிடையாது! கெத்து காட்டும் பாஜக! 170ல் அதிமுக தனித்து போட்டி.. இது பவர் பாலிடிக்ஸ்
சென்னை: தேர்தல் நெருங்குகிறது... பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாஜக ஆகியவற்றுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.. தினம் தினம் புதுவிதமான தகவல்கள் வந்தவண்ணம் உள்ளதால், இரு கூட்டணி கட்சிகளின் தேவைகள் பூர்த்தியாகுமா? என்ற ஆர்வமும் கிளம்பி உள்ளன...!!
கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற எம்பி தேர்தலில் பாஜக கூட்டணி தமிழகத்தில் சுமார் 11 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.. இந்த வாக்கு சதவீதத்தை ஒரு முக்கிய பலமாக பயன்படுத்தி, இந்த சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் இடங்களை பெறுவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.. இதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்குகின்றன..

பாஜக பேச்சுவார்த்தை
பாஜக தரப்பில் இந்த பேச்சுவார்த்தைகளை மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழு முன்னெடுக்கிறது.. அதிமுக தரப்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மூத்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்..
இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் சேர்த்து மொத்தம் 50 தொகுதிகளை அதிமுகவிடமிருந்து எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று பாஜக பிளான் செய்கிறதாம்.. இதில் பாஜகவுக்கு மட்டும் 35 தொகுதிகளும், அமமுக மற்றும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு 15 தொகுதிகளும் ஒதுக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாகவும் உள்ளது..
டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தொகுதி பேச்சுவார்த்தையை நேரடியாக பாஜகவுடன் மட்டுமே நடத்துவேன் என்றும், பாஜகதான் தன்னை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்தது என்றும் தெளிவாகவே சொல்லி உள்ளார். எனவே தங்களது கட்சிக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திம் வருகிறார்..
இதேபோல் ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவையும் தலா 2 தொகுதிகளை எதிர்பார்த்து பாஜகவை அணுகியுள்ளன..
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வெறும் 20 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.. ஆனால், இந்த முறை அதே எண்ணிக்கையை ஏற்க பாஜக தயாராக இல்லை..
30 சீட் கேட்குதா பிஜேபி
குறிப்பாக, 30 தொகுதிகளுக்கும் குறைவாக கிடைத்தால் அது கட்சி தொண்டர்களின் உற்சாகத்தை பாதிக்கும் என்பதால், 30 தொகுதிகளுக்கும் குறைவான இடங்களை ஏற்க முடியாது என்று பாஜக தரப்பு மறைமுகமாக அதிமுக தலைமையிடம் தெரிவித்துள்ளது.. அமமுக மற்றும் மற்ற கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளையும் சேர்த்து, என்டிஏ கூட்டணிக்கே மொத்தம் 40 முதல் 50 தொகுதிகள் வரை தேவைப்படும் என்று பாஜக தரப்பு வலியுறுத்தியுள்ளது..
ஆனால், அதிமுக என்ன செய்ய போகிறதென்று தெரியவில்லை.. எனினும், அதிமுக தலைமை மிகவும் நிதானமாக தனது அரசியல் கணக்கை முன்னெடுத்து வருகிறது..
எடப்பாடி பழனிசாமி கறார்
குறைந்தது 170 தொகுதிகளில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது.. அதனால், பாஜகவுக்கு அதிகபட்சமாக 25 தொகுதிகளையும், அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கு மேலும் 10 தொகுதிகளையும் மட்டுமே ஒதுக்க முடியும் என்று அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது..
இதுதவிர, பாமகவுக்கு 17 அல்லது 18 தொகுதிகளுடன், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தையும் வழங்க அதிமுக முன்வந்துள்ளது.. மேலும், தமாகா உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டிய சூழலில் அதிமுக உள்ளது..
இந்நிலையில், 2 தரப்புகளுக்கும் இடையே இழுபறி நிலை தொடர்ந்தாலும், வரும் மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கு வரப்போகிறார்.. அந்த வருகைக்கு பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதி உடன்பாடு எட்டப்பட்டு, கூட்டணி ஒப்பந்தங்கள் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.. ஆக மொத்தம், தமிழக அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான முடிவாக இந்த தொகுதி பங்கீடு அமையப்போகிறது..!!!
-
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா












Click it and Unblock the Notifications