ஞானசேகரனுடன் தொடர்பா? "நாங்கள் போனில் பேசிய ஆடியோவை வெளியிடுங்க".. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால்!
சென்னை: "ஞானசேகரனுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வேண்டுமென்றால் திமுக வட்டச் செயலாளர் கோட்டூர் சண்முகத்துடன் நான் பேசிய ஆடியோவை வெளியிடுங்கள்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் தொடர்பு உள்ளது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழக சம்பவம்
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். சென்னை மகளிர் நீதிமன்றம் கடந்த மே மாதம் 28ஆம் தேதி ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும், ஞானசேகருக்கு 30 ஆண்டுகள் ஆயுள் சிறை தண்டனை மற்றும் 90,000 ரூபாய் அபராதம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு தொடர்பு - அண்ணாமலை
இதையடுத்து ஞானசேகருக்கும் அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கும் சம்மந்தம் இருக்கிறது என்றும் அமைச்சரை ஏன் விசாரிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை. மேலும் திமுகவின் 170-வது வட்டச் செயலாளர் கோட்டூர் சண்முகமும் ஞானசேகரனும் 25 ஆம் தேதி 6 முறை பேசியிருக்கிறார்கள். சண்முகம் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடமும் பேசியுள்ளார். அவர் எதற்காக பேசினார் என்று விசாரித்தார்களா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார்.
மா.சுப்பிரமணியன் விளக்கம்
குற்றவாளி ஞானசேகரனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்திருந்தார். சண்முகம் என்ற வட்ட செயலாளார் எனக்கு போன் செய்தார் என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். எனக்கு கீழே 83 வட்ட செயலாளர்கள் இருக்கின்றார்கள். நான் ஒரு மாவட்ட செயலாளர். என் தலைமையில் இருக்கின்ற நிர்வாகத்தில் 82 வட்ட செயலாளர்கள் இருக்கின்றார்கள்.
ஒவ்வொரு நாளும் 10 முதல் 15 பேர் எனக்கு போன் செய்வார்கள். இந்த தேதி, இந்த நாளில் எனக்கு மாவட்ட செயலாளர் போன் செய்தார். அதனால் என்னை விசாரிக்க வேண்டும் என்று அண்ணாமலை சொல்கிறார். இது எல்லாம் ஒரு குற்றச்சாட்டா? எனக் கூறி இருந்தார் மா.சுப்பிரமணியன்.
எந்த சம்பந்தமும் இல்லை
நேற்றும் இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "குற்றவாளியான ஞானசேகரனுக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இதுவரை ஒருமுறை கூட அவர் என்னுடன் தொலைபேசியில் பேசியது கிடையாது. கோட்டூர் சண்முகம் வட்ட செயலாளர் என்ற முறையில் என்னை விழாவிற்கு அழைக்க பேசினார். அந்த புகைப்படத்தை பொறுத்தவரை மழை வெள்ள காலத்தில் துணை மேயர், அலுவலர்கள் உடன் சென்றிருந்தேன். அப்போது ஞானசேகரன் வீட்டு வாசலில் வைத்து வட்ட செயலாளர் சண்முகம் சிற்றுண்டி தந்தார்.
நான் போனில் பேசிய ஆடியோவை வெளியிடுங்க
அதை சாப்பிடும் போது ஞானசேகரன் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவ்வளவு தான். மற்ற படி ஞானசேகரனுக்கும், எனக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை. சண்முகம் போன் செய்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு பலமுறை விளக்கம் கொடுத்துவிட்டேன். வேண்டுமென்றால் சண்முகத்துடன் நான் பேசிய ஆடியோவை வெளியிட்டால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஐபிஎஸ் VS ஐபிஎஸ்.. பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டி? பாஜகவின் கையில் பெரிய பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார்












Click it and Unblock the Notifications