நகை கடன், நகை அடகு.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய மெசேஜ்.. நோட் பண்ணுங்க
சென்னை: நாடு முழுக்க பொதுத்துறை வங்கிகள் மூலம் நகை கடன்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சகத்தின் உத்தரவின் பெயரில் இந்த ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.
நகை கடன், அதை அடிப்படையாக வைத்து செயல்படும் அவர்களின் மார்க்கெட் மதிப்பு எல்லாம் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இதில் முறைகேடுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எல்லாம் சரியாக செயல்படுகிறது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வங்கிகளின் தங்கக் கடன் போர்ட்ஃபோலியோ, நடப்பு நிதியாண்டின் (2024-25) டிசம்பர் வரை ஆண்டுக்கு ஆண்டு 71.3 சதவீதம் உயர்ந்து ₹1.72 டிரில்லியனாக உயர்ந்துள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 17 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் அதிக வளர்ச்சி. ஆனாலும் இதில் முறைகேடுகள் இல்லை. தங்கத்தின் விலை உயர்வு காரணமாக இந்த வளர்ச்சி எட்டப்பட்டதாக நிதி அமைச்சகம் கூறி உள்ளது.
நகை கடன் அடகு எச்சரிக்கை
கடந்த ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சார்பாக வங்கிகள், நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. தங்கக் கடன்கள் குறித்த தங்கள் கொள்கைகள், செயல்முறைகள் மற்றும் நடைமுறைகளை விரிவாக மதிப்பாய்வு செய்ய வேண்டும். இதில் உள்ள முறைகேடுகள், தவறுகள் இடைவெளிகளைக் கண்டறிந்து, சரியான தீர்வு எடுக்க வேண்டும். முறையான நடவடிக்கைகளை சரியான நேரத்தில் மேற்கொள்ளுமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியது.
தங்கத்தை அடகு வைத்தவர்.. அதை திருப்பி மீட்காத பட்சத்தில் ஏலம் விடும்போது முறையாக ஆர்பிஐ விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டு உள்ளார்.
வங்கிகள் ஏலம் விடும்போது தங்கத்தை முறையாக ஏலம் விட வேண்டும். வங்கிகள் பொதுவாக ஆர்பிஐ விதிகளை பின்பற்றியே தங்கத்தை ஏலம் விடும். ஆனால் சில அடகு கடைகள் அப்படி செய்வது இல்லை.
வங்கி அல்லாத அடகு நிறுவனங்கள் சில விதிகளை பின்பற்றுவது இல்லை. அவைகள் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றாமல் தங்க நகைகளை ஏலம் விடுகின்றன. அடகு நிறுவனங்கள் இப்படி செய்வது தெரிந்தால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இந்த நிலையில்தான் நாடு முழுக்க பொதுத்துறை வங்கிகள் மூலம் நகை கடன்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சகத்தின் உத்தரவின் பெயரில் இந்த ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.
முக்கிய உத்தரவு
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் Scheduled Commercial Banks (SCBs) ஆகியவை ஒரே மாதிரியான விதிகளால் வழிநடத்தப்படுகின்றன. இவை ஆர்பிஐ கீழே வரவில்லை என்றாலும் ஏலம் விடுவதில் முறையாக ஆர்பிஐ விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
கடன் வாங்கியவர் தங்கக் கடனைச் செலுத்தத் தவறினால், NBFCகள் மற்றும் வங்கிகளால் தங்கத்தை ஏலம் விடுவதற்கு என்று முக்கியமான விதிகள், செயல்முறைகள் உள்ளன. இந்த செயல்முறைகளை NBFCகள் மற்றும் வங்கிகள் பின்பற்ற வேண்டும். இந்த செயல்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.
பொதுவாக தங்கத்தை ஏலம் விடுவதற்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். பல முறை நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நகை கடன் வாங்கியவர் திருப்பிச் செலுத்த வரவில்லை என்றால், வங்கி அல்லது NBFC ஏலத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் அதை முறையாக வாடிக்கையாளரிடம் தெரிவிக்க வேண்டும். இந்த செயல்முறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications