அமித்ஷா என்ன தகாத வார்த்தையா? உதயநிதி பேசியதில் தவறு இல்லை.. நயினாருக்கு முதல்வர் பதிலடி
சென்னை: சட்டசபையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பெயரை அமைச்சர் உதயநிதி பயன்படுத்தியதில் எந்த தவறும் இல்லை என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தமிழக சட்டசபையில் விளையாட்டு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி நடந்தது. அப்போது பேசிய தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், "சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. எனவே, சிஎஸ்கே அணிக்கு தடை விதிக்க வேண்டும்.
தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் சிஎஸ்கே அணியில் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. பிற மாநில வீரர்களுக்கே அணியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழகம் சார்பில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணியாக சிஎஸ்கே அணி விளம்பரப்படுத்தப்பட்டு, பெரும் வர்த்தக லாபத்தை ஈட்டுகிறது. எனவே, தமிழக வீரர்கள் இல்லாத சிஎஸ்கே அணிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்" என்று கூறினார்.

எஸ்.பி.வேலுமணி கோரிக்கை: அப்போது அதிமுக கொறடாவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சியில் ஐபிஎல் போட்டிகளை பார்க்க எம்எல்ஏக்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. தற்போது 300- 400 பாஸ் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் கிடைக்கவில்லை என சொன்னார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, பாஸ் வேணும்னு கேக்குறீங்க, என்ன சட்டசபைக்கான பாஸா என கேட்டார்.
ஐபிஎல் போட்டிக்கான பாஸ்: அதற்கு எஸ்.பி.வேலுமணியோ இல்லை ஐபிஎல் போட்டிக்கான பாஸ் கேட்கிறேன். அதுவும் விளையாட்டுதானே. அதனால்தான் மானியக் கோரிக்கையில் தெரியப்படுத்துகிறேன். எனவே விளையாட்டுத் துறை அமைச்சர் அதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என பேசினார். இதற்கு விளக்கம் அளிக்க விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சபாநாயகர் அப்பாவு அழைத்தார்.
உதயநிதி பதில்: அப்போது உதயநிதி கூறுகையில் சென்னையில் கடந்த 4 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளே நடக்கவில்லை. அப்படியிருக்கும் இருக்கும் போது நீங்கள் யாருக்கு பாஸ் கொடுத்தீர்கள் என தெரியவில்லை. ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பிசிசிஐ. அதற்கு உங்கள் நெருங்கிய நண்பரான அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாதான் தலைமை பொறுப்பில் உள்ளார். நாங்கள் கேட்டால் அவர்கள் பாஸ் தர வாய்ப்பில்லை. நீங்கள் கேட்டால் நிச்சயம் தருவார்கள்.
5 பாஸ் போதும்: அவரிடம் பேசி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் 5 பாஸ் வாங்கித் தந்தால் கூட போதுமானது. நாங்கள் கேட்டால் அது வேறுமாதிரி ஆகிவிடும். என் தொகுதியில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு என் சொந்த காசை கொடுத்து ஐபிஎல் போட்டியை நான் காண வைக்கிறேன் என தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தை இன்றைய தினம் நடந்த சட்டசபை நிகழ்வில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசிய போது கிளப்பினார்.
அவை குறிப்பில் நீக்க கோரிக்கை: அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை , மாண்புமிகு என சொல்லாமல் வெறும் அமித்ஷா என கூறியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், அமித்ஷா குறித்து அவையில் உதயநிதி பேசியதில் தவறில்லை. அவரது பெயரை குறிப்பிட்டது என்ன தகாத வார்த்தையா? திரு என குறிப்பிட்டுத்தானே அவர் பேசினார். தவறு இருந்தால் நானே நீக்க சொல்லிருப்பேனே என முதல்வர் விளக்கம் அளித்தார். இதை ஏற்க மறுத்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications