அப்படி போடு.. வானிலை மொத்தமாக மாறிடுச்சே..அடுத்த 4 நாட்களுக்கு.. தமிழ்நாட்டிற்கு குட் நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. வெயிலின் உக்கிரம் இப்போதைக்கு குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.

No more heat weather in Tamil Nadu: Rain is possible in many places for the next 4 days

சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.

சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.

No more heat weather in Tamil Nadu: Rain is possible in many places for the next 4 days

மகிழ்ச்சி செய்தி: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் திடீரென வெப்பநிலை குறைந்து வானிலை குளிராகி உள்ளது. தமிழ்நாட்டிற்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த திடீர் வானிலை மாற்றம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

அதே சமயம் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சில இடங்களில் சாரல் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

வானிலை: சென்னையில் இன்று மழை பெய்யாது. மேலே குறிப்பிட்டப்படி லேசான சாரல் மழையை தவிர்த்து சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றில் இருந்து கடுமையான வெயில் அடிக்கும் என்று வானிலை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்றில் இருந்து வெப்பநிலை உயரும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறி உள்ளது.

இது தொடர்பாக அவர்கள் நேற்று செய்துள்ள போஸ்டில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் உட்பட வட தமிழ்நாட்டில் மிதமான வெப்ப நிலையில் நிலவும் கடைசி நாளாக இன்று இருக்கலாம்.

அதனால் நாளை முதல் படிப்படியாக அதிகபட்ச வெப்பநிலையானது நிலவும். வெப்பநிலை நாளையில் இருந்து வலுவடைந்து குறைந்தபட்சம் 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையை எட்டும். மேற்கத்திய காற்றுகளின் தாக்கத்தால் வெப்பநிலை தமிழ்நாட்டில் மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டு உள்ளனர்.

No more heat weather in Tamil Nadu: Rain is possible in many places for the next 4 days

மீனவர்கள் எச்சரிக்கை: மன்னார் வளைகுடா மற்றும் தமிழக - ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும்.

25.05.2023 முதல் 27.05.2023 வரை இந்த பகுதிகளில் 45 கிலோ மீட்டர் வேகம் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

இதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும்.

26.05.2023 மற்றும் 27.05.2023 நாட்களிலும் கடல் பகுதியில் தீவிர காற்று இருக்கும். இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 55 கிமீ வேகத்தில் கூட காற்று வீசும்.

இதனால் அந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+