புதிய வரிகள் எதுவும் இல்லை! மக்களுக்கு சுமையை ஏற்றாத தமிழக பட்ஜெட் 2022!
சென்னை: தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாதது பொதுமக்களையும், தொழில்துறையினரையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்துள்ளது.
இதன் மூலம் சுமையில்லாத பட்ஜெட்டாக 2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் பார்க்கப்படுகிறது.
அரசின் நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் அது போல் எதுவும் நடக்கவில்லை.

தமிழக பட்ஜெட்
2022- 2023-ம் ஆண்டுக்கான தமிழக நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வரிசையாக வெளியிட்ட அவர், புதிய வரிகள் தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதன் மூலம் புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் பார்க்கப்படுகிறது.

சுமையில்லாத பட்ஜெட்
இதனிடையே அரசுக்கு வருவாய் ஆதாரத்தை அதிகரிக்கும் பொருட்டும் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தவும் புதிய வரிகள் விதிக்கப்படலாம் என கடந்த சில நாட்களாக ஆருடங்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால் அது போல் எந்த புதிய வரியும் விதிக்கப்படவில்லை. மக்களுக்கும், தொழிற்துறையினருக்கும் சுமையில்லாத பட்ஜெட்டாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உருவாக்கியுள்ளார்.

புதிய திட்டம்
இதனிடையே பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில், மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தை இனி மூவாலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிகளில் உயர்கல்வி கற்கும் பெண்களுக்கு மாதம் தோறும் அவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.1000 உதவித் தொகை சென்று சேரும்.

அறிவுசார் நகரம்
இதேபோல் மற்றொரு புதிய திட்டமாக தமிழகத்தில் அறிவுசார் நகரம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் இன்றைய தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கிறது. தமிழகத்தில் திறன்மிக்க மனிதவளத்தை பயன்படுத்தி சர்வதேச அளவிலான பங்களிப்புடன் இந்த அறுவுசார் நகரம் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications