சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அழிக்க நினைச்சா.. அழிஞ்சிருவீங்க! இன்னொரு மண்டபத்தில் என்ன நடக்கிறது என தெரியும்ல" முதல்வர் பஞ்ச்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக அமைச்சரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிமுகவை மறைமுகமாகச் சாடி பேசினார்,

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

மருத்துவரின் அறிவுரைப்படி இரு நாட்கள் அவர் ஓய்வில் இருந்த நிலையில், இப்போது முதல்வர் ஸ்டாலின் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தொடங்கி உள்ளார்.

 அண்ணாமலை ஐபிஎஸ் படிக்க காரணமே திமுக தான்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் அதிரடி பேட்டி! அண்ணாமலை ஐபிஎஸ் படிக்க காரணமே திமுக தான்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் அதிரடி பேட்டி!

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்தச் சூழலில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்ல திருமண விழா இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு மணமக்களை வாழ்த்திப் பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிமுகவையும் மறைமுகமாகச் சாடினார்.

 இன்னொரு மண்டபம்

இன்னொரு மண்டபம்

திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இங்கு எதோ நமது வீட்டுத் திருமணம் நடப்பதைப் போல் நினைத்து, நாம் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வருகிறோம். இதேநேரத்தில் இன்னொரு பக்கம் திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அதை நான் சொல்லத் தேவையில்லை. அந்த பிரச்சினை குறித்து நான் பேசவும் விரும்பவில்லை.

 திமுகவை அழிக்க முடியாது

திமுகவை அழிக்க முடியாது

அதில் தலையிட வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் எப்போதும் அழிந்து போயுள்ளனர். திமுக ஒருபோதும் அழிந்ததாக வரலாறு இல்லை. இந்த உணர்வோடு நாம் இருக்கிறோம். திராவிட மாடல் குறித்து நாம் பெருமையோடு பேசி வருகிறோம். அதே திராவிட மாடலில் நடைபெறும் திருமணம் இது. அனைவரின் சார்பில் நான் மண மக்களுக்கு வாழ்த்துகிறேன்" என்றார்.

 அதிமுக

அதிமுக

அதிமுக சார்பில் வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. ஒற்றை தலைமை விவகாரம் அங்கு எழுந்துள்ள நிலையில், மண்டபத்தில் ஒரே கூச்சல் குழப்பம் நிலவுகிறது. மேடைக்கு வந்த ஒருங்கிணைப்பாளருக்கு ஒ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Recommended Video

    மேடையிலேயே கடுப்பான EPS | AIADMK பொதுக்குழு கூட்டம் | Oneindia Tamil
     முதல்வர் சாடல்

    முதல்வர் சாடல்

    ஒரு வழியாக அனைத்து தலைவர்களும் வந்த பின்னர் பொதுக்குழு தொடங்கியது. அப்போது அங்குக் கொண்டு வந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒற்றை தலைமை உடன் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும் அடுத்த பொதுக்குழு வரும் ஜூலை 11 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் முதல்வர் ஸ்டாலின், அதிமுகவை நேரடியாகக் குறிப்பிடாமல் சாடி உள்ளார்.

    English summary
    Tamilnadu CM stalin attacks ADMK as it suffers intertal issue: (அதிமுகவை விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்) CM stalin new attack against admk.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X