சீமான் வெளியிட்ட “லிஸ்ட்”.. திமுக பக்கம் இருந்து வாழ்த்தே இல்லையா? புறக்கணிக்கும் ‘இந்தியா’ கூட்டணி?
சென்னை: சீமான் தமக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்கள் பட்டியலை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். அதில் திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பெயர் கூட இடம்பெறவில்லை.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது 57-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். சீமான் பிறந்தநாளுக்கு தமிழ் திரைப்பட நடிகர்கள் முதல் முன்னணி அரசியல் தலைவர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

சீமான் பிறந்தநாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர் விஜய், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மகளிர் அணி தலைவியும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சீமான். தனக்கு வாழ்த்து தெரிவித்த முக்கிய பிரமுகர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார் சீமான். எடப்பாடி பழனிசாமி தொடங்கி பலரது பெயரும் இடம்பெற்றுள்ள அந்தப் பட்டியலில் திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த ஒருவரின் பெயரும் இடம்பெறவில்லை.
காங்கிரஸ் கட்சியை ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்து வருகிறார் சீமான். திமுகவையும் விமர்சித்தாலும் அதேசமயம், பல நேரங்களில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை பாராட்டும் வகையிலும் பேசி இருக்கிறார் சீமான். கடந்த மார்ச் 1ஆம் தேதி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளைக் கொண்டாடியபோது அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் வாழ்த்து தெரிவித்திருந்தார். முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்கள் பட்டியலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், அவரது பிறந்தநாளுக்கு திமுக தரப்பில் இருந்து வாழ்த்து தெரிவிக்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2010ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கிய சீமான் 2016, 2021 சட்டசபை தேர்தல்களிலும் 2019 லோக்சபா தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டார். இப்போதும் எப்போதும் தனித்தே போட்டி என்று கூறி வருகிறார். தனித்து நின்று தனக்கென ஓட்டு வங்கியை உருவாக்கி வரும் சீமான், வரவிருக்கும் 2024 லோக்சபா தேர்தலிலும் தனித்துக் களமிறங்கத் தயாராகி வருகிறார்.
தனித்துத் தான் நிற்பேன் என கூறிவரும் சீமானுக்கு, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நிலையில், திமுக தரப்பில் இருந்து வாழ்த்து சொல்லாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து கூறும் முதல்வர் ஸ்டாலின், சீமானுக்கு வாழ்த்து தெரிவிக்காதது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து விசிக தலைவர் திருமாவளவன் மட்டுமே சீமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் ஷூட்டிங்கிற்கு சென்றுள்ள விஜய் போனில் அழைத்து சீமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், திமுகவில் இருந்து உதயநிதி ஸ்டாலின் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications