அந்த 25 ஏக்கரில் யாருமே இல்லை.. பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலகம் ஆதவ் அர்ஜுனா புது விளக்கம்
சென்னை: தவெக ஆட்சியமைத்து 5 மாதங்கள் கடந்துவிட்டன. முதலமைச்சர் விஜயும், அதிகாரிகளும் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். சட்டம் ஒழுங்கு பாதிப்பு, மின்வெட்டு, தொழில் முதலீடு சொதப்பல் என பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமை செயலகம் கட்ட திட்டமிட்டுள்ளனர். இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய தலைமை செயலகம் கட்டும் 25 ஏக்கரில் யாரும் இல்லை என ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்துள்ளார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அந்த 25 ஏக்கரில் யாருமே இல்லை. பக்கத்தில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்படும் என்று நினைக்கிறார்கள். நிச்சயமாக மாண்புமிகு முதலமைச்சர்கள் மீனவ மக்களுடன் கலந்துரையாடல் நடத்த சொல்லியுள்ளார். அரசு அதற்கான கமிட்டியை உருவாக்கி மீனவர்களிடம் கலந்துரையாடுவோம். கமிட்டி மூலம் மீனவர்களின் பிரச்சனை கேட்கப்படும்.

எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம்
இதுகுறித்து முதலமைச்சருக்கும் அறிக்கை தாக்கல் செய்யப்படும். மீனவ மக்கள் என்ன நினைக்கிறார்கள், அங்கு வேறு என்னென்ன பிரச்சனை உள்ளது. முகாந்திரம் என்ன உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிடுவோம். ஒவ்வொரு ரிப்போர்டாக செல்ல செல்ல தான் அடுத்தக்கட்டத்திற்கு செல்வோம். உடனடியாக காவல்துறை மூலம் அந்த இடத்தை நாங்கள் காலி செய்வது போல ஒரு போலி பிரச்சாரத்தை பரப்புகிறார்கள்.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தவறான பிரச்சாரத்தை வைப்பது இயல்பு. அதை அரசியலாக்க எங்களுக்கு விருப்பமில்லை. எங்கள் நோக்கமும் அது இல்லை. மேல்மாவில் சிப்காட் அமைப்பதற்கான அரசாணை இன்று அரசிதழில் வந்துவிட்டது. ஒரு ஊடகத்தில் செய்தி வந்த, அடுத்த நொடியே முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டோம். இரண்டு மணி நேரத்தில் அதை ரத்து செய்வதாக செய்தி குறிப்பில் வெளியிட்டோம்.
மின்சார பிரச்சனை
விவசாயிகளிடம் நிலம் எடுக்க மாட்டோம் என 2 மணி நேரத்தில் சொல்லிவிட்டோம். அதனால் விவசாயிகளும், மீனவர்களும் எங்களுக்கு எப்போதும் சகோதர சகோதரிகள். அதுவரைக்கும் எந்த கட்சியும் ஒரு அரசின் மீது வீணாண குற்றச்சாட்டு, தவறான பொய் பிரச்சாரத்தை முன் வைக்க வேண்டாம். கடந்த 5 ஆண்டுகளில் மின் பாதுகாப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புதிய நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை குறைந்ததால் நீர்மின்நிலைய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. காற்றும் நின்றுவிட்டது. கிளைமேட் மாறிவிட்டது. அதனால் மின்சார தேவை அதிகமாக உள்ளது. அதனால் வெளியில் இருந்து அதிகம் கொள்முதல் செய்கிறோம். தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு உடல்நிலை சரியில்லை.
அதன் காரணமாக தான் அவர் லண்டன் வரவில்லை.
லண்டன் பயணம்
அதேநேரத்தில் ஒட்டு மொத்த அதிகாரிகளும் வந்தனர். தொழில்துறை அமைச்சர் ஏற்கனவே வெளிநாடுகள் சென்றுள்ளார். பயணம் செய்ய முடியாத சூழ்நிலை. துறை செயலாளர் கூட குடும்ப நிகழ்ச்சி காரணமாக வரவில்லை. மற்ற அதிகாரிகள் அனைவரும் வந்தனர். எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக போலி பிரச்சாரத்தை வைக்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications
