Election: ஓட்டு போட உங்க நிறுவனத்தில் லீவ் தரலயா? உடனே புகார் அளிக்கலாம்.. எப்படி?
சென்னை: தேர்தல் நடைபெறும் நாளில் சம்பளத்துடன் விடுப்பு அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து புகார் அளிக்க தொழிலாளர்துறை சார்பில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் அத்தியாவசிய சேவையில் உள்ள பணியாளர்கள் தங்களது தபால் வாக்குச்சீட்டுகளை மின்னணு முறையில் அனுப்பும் ETPBMS நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வசதியாக அனைத்து தொழில் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், கட்டுமான நிறுவனங்கள் ஆகியன தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும். ஒருவேளை விடுமுறை வழங்காவிட்டால், நிறுவனங்கள் மீது தொழிலாளர் சட்டத்தின்படி, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்களிக்க ஏதுவாக விடுமுறை
அனைத்துத் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணியிடங்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், தேர்தல் நாளன்று தங்குதடையின்றி வாக்களிக்க ஏதுவாக, 23.04.2026 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.
அனைத்துத் தொழிற்சாலை உரிமையாளர்களும், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரும் தேர்தல் நாளன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, விடுமுறை அளிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புகார் அளிக்கலாம்
தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் குறித்துப் புகார் தெரிவிக்க விரும்புவோர், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை எண்களைத் தொடர்பு கொள்ளலாம். ஜனநாயகக் கடமையை நிறைவேற்றத் தொழிலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது ஒவ்வொரு நிறுவனத்தின் கடமையாகும்.
இதுகுறித்து புகார் அளிக்க தொழிலாளர் துறை சார்பில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கோவை : விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர்கள் 0422-2241136, 82206 13777, 95008 97708, 98433 71977 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
சென்னை மண்டலத்திற்கு 1800-425-7012 என்ற கட்டணமில்லா எண்ணிலும், அந்தந்த மாவட்ட தொழிலாளர் துறை கட்டுப்பாட்டு அறைகளிலும் புகார் அளிக்கலாம்.
ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளுக்கு பொதுப் பார்வையாளர் தேம்ஜென்வாபாங் ஆவோவிடம், 89258 15411 எண்ணில் புகார் அளிக்கலாம், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகளுக்கு விக்ரம் குமார் - 89258 15413, திரு.வி.க.நகர், எழும்பூர் தொகுதிகளுக்கு ஜி.ஸ். சஹோடா - 89258 15415, ராயபுரம், துறைமுகம் தொகுதிகளுக்கு எஸ்.எல்.நவீன் - 89258 15417,
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு தொகுதிகளுக்கு சுதிர் பாரா - 89258 15419, அண்ணாநகர், விருகம்பாக்கம் தொகுதிகளுக்கு ரஞ்சித் குமார் சிங் - 89258 15421, சைதாப்பேட்டை, தியாகராய நகர் தொகுதிகளுக்கு நான்சி சஹாய் - 89258 15423, மயிலாப்பூர், வேளச்சேரி தொகுதிகளுக்கு 89258 15425 ஆகிய எண்களில் மக்கள் புகார் அளிக்கலாம்.
திருப்பூர் : தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து, புகார் செய்யலாம். உதவி கமிஷனர் காயத்திரி 94430 21877, துணை ஆய்வாளர் பேச்சிமுத்து 99442 58037, உடுமலை முத்திரை ஆய்வாளர் சதீஷ்கண்ணன்- 99521 42578 என்ற எண்களில் புகார் அளிக்கலாம். தேர்தல் நாளில் விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
விருதுநகர் மற்றும் சிவகாசி: தொலைபேசி எண்கள்: 04562-294067, 04562-294068, 04562-294069
கட்டணமில்லாத் தொலைபேசி எண் (Toll Free): 1800 425 2166
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications