ஜூன் 30 முதல் ரூபாய் நோட்டுகள் செல்லாது? பீதியைக் கிளப்பும் வாட்ஸ்ஆப் மெசேஜ்! உண்மை என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் வரும் ஜூன் 30 முதல் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகவும், அதன்பிறகு காகித ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் கூறப்பட்ட தகவல்கள் பொதுமக்களிடையே குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தின. இந்நிலையில், தற்போது பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சமீப நாட்களாக சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில், "ரிசர்வ் வங்கி புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது", "ஜூன் 30க்குப் பிறகு பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது" போன்ற செய்திகள் வேகமாக பரவி வந்தன.

Currency RBI Indian Rupee

இதனால் பலர் உண்மையில் ரூபாய் நோட்டுகளில் மாற்றம் வரப்போகிறதா என்ற சந்தேகத்தில் இருந்தனர்.
இந்த சூழலில், மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் இந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு

தற்போது பிளாஸ்டிக் அல்லது பாலிமர் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எந்தத் திட்டமும் இல்லை என்றும், தற்போதைய ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகள் முழுமையாக காகிதத்தால் தயாரிக்கப்படவில்லை. பருத்தி மற்றும் லினன் கலவையால் உருவாக்கப்படும் சிறப்பு தாள்களில்தான் அவை அச்சிடப்படுகின்றன. இந்த நோட்டுகள் காலப்போக்கில் கிழிவது, மடங்குவது மற்றும் அழுக்காகும் தன்மை கொண்டவை என்பதால் அவற்றை மாற்றி புதிய நோட்டுகள் அச்சிட வேண்டிய தேவை ஏற்படுகிறது.

பாலிமர் நோட்டுகள்

உலகின் சில நாடுகள் பாலிமர் நோட்டுகளை பயன்படுத்தி வருகின்றன. இவை சாதாரண காகித நோட்டுகளை விட நீண்ட ஆயுள் கொண்டவை. மேலும், பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இருப்பதால் கள்ள நோட்டுகள் தயாரிப்பதையும் கட்டுப்படுத்த முடியும். இதுபோன்ற காரணங்களால் இந்தியாவிலும் பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகமாகலாம் என்ற யூகங்கள் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது வெளியாகி வந்தன. ஆனால் தற்போது சமூக ஊடகங்களில் பரவியுள்ள தகவல்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ அடிப்படையும் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு

குறிப்பாக, ஜூன் 30 முதல் காகித ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தகவல் முற்றிலும் வதந்தி என்றும், மக்கள் அதை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி அல்லது மத்திய அரசு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்போது அவற்றை அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் அரசு வெளியிடும் அறிவிப்புகள் மூலமாக மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி

சமூக ஊடகங்களில் பரவும் சரிபார்க்கப்படாத தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால், தற்போது நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகமாகவில்லை என்பதும், தற்போதைய ரூபாய் நோட்டுகள் வழக்கம்போல செல்லுபடியாகவே இருக்கும் என்பதும் உறுதியாகியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+