பாஜக கூட்டணி, நாம் தமிழர் வேண்டாம்! அதிமுக வாக்குகள் அப்படியே திமுகவிற்கு போன அதிசயம்! இதை பாருங்கள்
சென்னை: விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கே அதிமுக வாக்குகள் அப்படியே திமுகவிற்கு டிரான்ஸ்பர் ஆகி உள்ளது.
விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடந்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு ஆனது. அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அப்படி இருக்க 82.48% வாக்குகள் பதிவு ஆனது

இதில் 124053 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார். 67757 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றுள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 56296 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10602 வாக்குகள் பெற்றுள்ளார். விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்துள்ளது.
டெபாசிட்: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் படி, நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு குறிப்பிட்ட கட்டு தொகையை டெபாசிட் செய்வது கட்டாயமாகும். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ரூ.25 ஆயிரமும், சட்டமன்றத் தேர்தல் என்றால் ரூ.10 ஆயிரமும் ஆகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கும் இதே தொகைதான். இந்தத் தொகை தேர்தல் ஆணையத்திடம் டெபாசிட் செய்யப்பட்டு தேர்தலில் பாதுகாப்பு வைப்புத்தொகை என்று அழைக்கப்படுகிறது.
தீவிர உண்மையான வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதை உறுதி செய்ய வைப்புத் தொகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இப்போது, ஒரு தொகுதியில் பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கிற்குக் குறைவாக வேட்பாளர் பெற்றால், அவரது பாதுகாப்பு வைப்புத் தொகை இழக்கப்படும். அதாவது டெபாசிட் இழப்பார். அந்த தொகை கிடைக்காது. அதாவது ரூ.25,000 அல்லது ரூ.10,000 தொகை டெபாசிட் செய்த வேட்பாளருக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் திருப்பி அளிக்கப்படாது.
உதாரணமாக, ஒரு சட்டமன்றத் தொகுதியில் 200,000 வாக்குகள் பதிவாகியிருந்தால், பாதுகாப்பு வைப்புத் தொகையைச் சேமிக்க, ஒவ்வொரு வேட்பாளரும் மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கைப் பெற வேண்டும். அதாவது ஒவ்வொரு வேட்பாளரும் 33,332 வாக்குகளுக்கு மேல் பெற வேண்டும்.
எத்தனை வாக்குகள்: விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடந்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு ஆனது. அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அப்படி இருக்க 82.48% வாக்குகள் பதிவு ஆனது
இதன் அர்த்தம் அதிமுக தேர்தல் புறக்கணிப்பை மக்கள் கண்டுகொள்ளவில்லை. அதிமுகவிற்கு பாரம்பரியமாக வாக்களிக்கும் மக்களும் அதிமுக இல்லை என்றாலும் கவலைபடாமல் வந்து வாக்களித்து உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்ட போது பதிவான வாக்குகள்-182426.
எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவிப்பு செய்தபோது பதிவான வாக்குகள்-195495. இதன் அர்த்தம் அதிமுக இல்லையென்றாலும் அதை மக்கள் பொருட்டாக கருதவில்லை. இங்கே டெபாசிட் பெற தேவையான வாக்குகள் 32583 ஆகும். இங்கே நாம் தமிழர் டெபாசிட் இழந்துள்ளது.
அதோடு விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கே அதிமுக வாக்குகள் அப்படியே திமுகவிற்கு டிரான்ஸ்பர் ஆகி உள்ளது. மக்கள் பாமக, நாம் தமிழருக்கு வாக்களிக்காமல் திமுகவையே தேர்வு செய்துள்ளனர்.
அங்கு கடந்த சட்டசபை தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் வாங்கிய வாக்குகள் 84157. இந்த முறை பாமக வாங்கி உள்ள வாக்குகள் 56296. மீதமுள்ள 30 ஆயிரம் அதிமுக வாக்குகளில் 28 ஆயிரம் அப்படியே திமுகவுக்கு மாறி உள்ளனர். வெறும் 2000 மட்டுமே கூடுதலாக நாம் தமிழருக்கு கடந்த முறையை விட இந்த முறை அதிகமாக சென்றுள்ளது. அதன்படி இங்கே அதிமுக வாக்குகள் அப்படியே திமுகவிற்கு டிரான்ஸ்பர் ஆகி உள்ளது உறுதியாகி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications