மிமிக்கிரியா? நைட் 9.59 க்கு நடந்தது தெரியும்ல.. பொன்னையன் பேசுன ஆதாரம் இருக்கு! கோலப்பன் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அமைப்புச்செயலாளர் பொன்னையன் தன்னிடம் பேசியது உண்மைதான், அவர் அதை மறைகிறார் என்று அதிமுக நிர்வாகி கோலப்பன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Ponnaiyan விளக்கம் | Leaked Audio-ல் இருப்பது என்னோட Voice இல்ல | *Politics

    நேற்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்ததாக பொன்னையன் பேசியாதாக இந்த ஆடியோவில் பதிவாகி இருந்தது.

    அந்த ஆடியோவில் எடப்பாடி பழனிசாமிக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை.9 எம்எல்ஏ க்களின் ஆதரவு மட்டுமே அவரிடம் உள்ளது, இதனால் எடப்பாடி கட்டுப்பாட்டில் கட்சி இல்லை. வேலுமணி, தங்கமணி போன்றார்தான் கட்சியை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்கள், என்று பொன்னையன் கூறுவதாக ஆடியோ பதிவாகி இருந்தது.

    என்ன சொன்னார்?

    என்ன சொன்னார்?

    மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி முதுகில் குத்திவிட்டனர். எடப்பாடிக்கு வேறு வழியே இல்லை. அவர் எம்எல்ஏக்களை கொள்ளையடிக்க விட்டு இப்போது மாட்டிக்கொண்டார். பதவியை காப்பாற்றிக்கொண்டால் போதும் என எடப்பாடி பழனிசாமி முட்டாள்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறார். யாரும் கட்சிக்கு விஸ்வாசமாக இல்லை. சிவி சண்முகத்திடம் 19 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். கொங்கு மண்டபத்தில் கூட எடப்பாடி கையில் எம்எல்ஏக்கள் இல்லை, என்றும் பொன்னையன் பேசுவதாக இந்த ஆடியோவில் பதிவாகி இருந்தது.

     மறுப்பு

    மறுப்பு

    இந்த ஆடியோ முழுக்க முழுக்க பொய்யானது என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் மறுப்பு தெரிவித்துள்ளார். பொன்னையன் அளித்துள்ள விளக்கத்தில், நான் பேசியதாக வெளியான ஆடியோ பொய்யானது. மிமிக்கிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொய்யாக ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். என் மீது அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஆடியோ வெளியிட்டுள்ளனர்., என்று குறிப்பிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பனுடன் பொன்னையன் பேசியதாக கூறப்படும் இந்த ஆடியோ அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

     மிமிக்கிரியா

    மிமிக்கிரியா

    இந்த நிலையில் தன்னுடன் பொன்னையன் பேசியது உண்மைதான், தற்போது அதை மறுத்து பேசுகிறார் என்று கோலப்பன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் , என்னுடன் பேசியது பொன்னையன் தான். அவர்தான் பேசினார், மிமிக்ரி செய்ய வேண்டிய அவசியமில்லை. பொன்னையன் எப்போது என்னிடம் பேசினார் என்பதற்கான ஆதாரம் உள்ளது. இதை அவர் மறுக்க முடியாது.

    மறுக்க முடியாது

    மறுக்க முடியாது

    ஜூலை 9ம் தேதி இரவு 9.59 மணிக்கு பொன்னையன் என்னுடன் பேசினார். அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. என் கால் ரெக்கார்ட் பார்த்தாலே தெரியும். அதை தேவைப்படும் நேரத்தில் வெளியிடுவேன், என்று அதிமுக நிர்வாகி கோலப்பன் தெரிவித்துள்ளார். அவர் இப்படி ஆதாரங்களை வெளியிடுவேன் என்று கூறி வருவது அதிமுகவில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+