நடிகர் மயில்சாமியின் உடலுக்கு பிரேத பரிசோதனை இல்லை.. மருத்துவர்கள் கூறிய காரணம் என்ன?
நடிகர் மயில்சாமியின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை
சென்னை: நடிகர் மயில்சாமியின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவத்துள்ளன.
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருபவர் நடிகர் மயில்சாமி. இவர் காமெடி நடிகர் மட்டுமல்லாமல் மிமிக்ரி ஆர்டிஸ்ட், நிகழ்ச்சி தொகுப்பாளர், விவாதங்களில் பங்கேற்பவர், குணசித்திர நடிகர் உள்ளிட்ட பன்முகங்களை கொண்டவர்.
இவர் சமூகம் சார்ந்த விஷயங்களை தனது நடிப்பின மூலம் மக்களிடம் எடுத்துச் சென்றார். நடிகர் விவேக் மறைந்த போது மிகவும் உடைந்துவிட்டார். விவேக் குறித்து பிரஸ் மீட்டில் பேசிக் கொண்டிருந்த போது கதறி அழுதார்.

விவேக்கின் உடல்
அது போல் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மன்சூர் அலிகானை கட்டி அணைத்து கொண்டு மயில்சாமி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது. இல்லாதவர்களுக்கு உதவும் குணம் படைத்தவர் மயில்சாமி. 2021 ஆம் ஆண்டு விருகம்பாக்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை கண்டார்.

தோல்வி
எனினும் அவர் தோல்வியை பற்றி கண்டுகொள்ளாமல் தனது தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தவர். இன்றளவும் தொகுதி மக்களின் பெரும்பாலான துயரங்களை தன்னால் இயன்றவரை துடைத்தவர். இவர் சமூகம் சார்ந்த விஷயங்களில் மட்டுமல்லாமல் ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர்.

சிவபக்தர்
அவர் தீவிர சிவபக்தர். சிவனுக்கு தொண்டாற்றியவர். சிவராத்திரியை முன்னிட்டு விரதம் இருந்து சிவன்கோயிலுக்கு சென்றுவிட்டுதான் உணவு அருந்துவார். அவர் பெரும்பாலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் இந்த ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு செல்லாமல் கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் சிவன்கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

போரூர் தனியார் மருத்துவமனை
இதையடுத்து அவரை போரூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போரூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போரூர் போலீஸார் உயிரிழந்த மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மயில்சாமி உயிரிழப்பு
தொடர்ந்து மயில்சாமி உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் மயில்சாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது.

மாரடைப்பு
அதன் பின்னணியாக, அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கெனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை. இதையடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

கதறல்
அவரது இறப்பை தாளமுடியாமல் அப்பகுதி மக்கள் கதறி அழுகிறார்கள். சென்னை 2015 புயல், வெள்ளம், மழை, கஜா புயல் காலங்களில் தனது இருப்பிடத்தில் மட்டும் இல்லாமல் டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களுக்கும் உணவு விநியோகித்தவர் மயில்சாமி. உதவும் அளவுக்கு பொருளை அண்ணாமலையார் கொடுத்திருக்கிறார். எனவே இருக்கும் வரை உதவ வேண்டும் என்பதை அடிக்கடி அவர் கூறுவாராம்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications