அன்பான மனுஷன்.. ராகுல் அண்ணாவின் மீது அவதூறு பரப்பாதீங்க.. விட்டு விளாசிய வில்லேஜ் குக்கிங் சேனல்
சென்னை; காங்கிரஸ் ராகுல் காந்தி, அவர் மீது தேவையற்ற அவதூறு பரப்ப வேண்டாம் என்று பிரபல வில்லேஜ் குக்கிங் சேனல் தெரிவித்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக வில்லேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ரசித்து ருசித்து சாப்பிட்ட வீடியோ கவனம் பெற்றது. இந்த வீடியோவை Village cooking channel பதிவிட்டது.

டிரெண்டான வீடியோ: கிராம மக்கள் நடத்தும் Village cooking channel எனப்படும் யுடூயூப் சேனலில் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று அழகுத் தமிழில் பேசி வெங்காய ரைத்தாவை கலக்கினார். அப்போது வெங்காயம், தயிர், கல் உப்பு என்று சத்தமாக சொல்லிக்கொண்டே கலக்கி ஒரு வெங்காயத்தை எடுத்து உப்பு சரியாக இருக்கிறதா என்று டேஸ்ட் பார்த்தார் ராகுல்காந்தி.
உங்க நிகழ்ச்சியை நான் யூடியூப்பில் பார்த்திருக்கிறேன் நேரில் பார்க்க வந்திருக்கிறேன் என்று ராகுல்காந்தி ஆங்கிலத்தல் சொல்லவே அதை தமிழில் மொழி பெயர்த்தார் ஜோதிமணி எம்பி. அதைக் கேட்ட எல்லோரும் முகத்திலும் மகிழ்ச்சி அதிகரித்தது. சமையல் செய்தவர்களின் கைகளை பிடித்துக்கொண்டு சாதாரணமாக பேசிய ராகுல் ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்தார்.
தலைவாழை இலை பரப்பி, அவருக்கு காளான் பிரியாணி, கத்திரிக்கா குழம்பு, தயிர் வெங்காய ரைத்தா பரிமாறப்பட்டது. ரசித்து ருசித்து சாப்பிட்ட ராகுல்காந்தி, மட்டன், சிக்கன் போட்டு இதே முறையில்தான் பிரியாணி செய்ய வேண்டுமா என்று சந்தேகம் கேட்டார். சாப்பிட்ட பிறகு சூப்பர் என்று சொல்லி அதற்கு தமிழில் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்கவே, நல்லாயிருக்கு என்று சொல்ல, அதே போல நல்லாயிருக்கு சொல்லி கைகளை பிடித்து நன்றி சொன்னார்.
பொய்யான செய்தி; இந்த வீடியோ வைரலான நிலையில்தான் தற்போது காங்கிரஸ் ராகுல் காந்தி, அவர் மீது தேவையற்ற அவதூறு பரப்ப வேண்டாம் என்று பிரபல வில்லேஜ் குக்கிங் சேனல் தெரிவித்துள்ளது. சமீபத்தில் இந்த சேனலில் இருக்கும் தாத்தாவிற்கு இதய பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!, என்று வில்லேஜ் குக்கிங் சேனல் தெரிவித்தது.
இந்த இதய பாதிப்பிற்கு உதவி கேட்டு.. அதை ராகுல் காந்தி செய்யவில்லை என்று பொய்யான செய்திகள் இணையத்தில் பரவி வந்தது. மருத்துவ செலவிற்கு வில்லேஜ் குக்கிங் சேனல் உதவி கேட்டதாகவும், அதை ராகுல் காந்தி மறுத்துவிட்டதாகவும் செய்திகள் பொய்யாக பரவியது.
இதையடுத்து வில்லேஜ் குக்கிங் சேனல் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், இது முற்றிலும் பொய்! எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது! இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சி தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்! என்று குறிப்பிட்டு உள்ளனர்.
வதந்திகளை புறக்கணியுங்கள் காங்கிரஸ் ராகுல் காந்தி, அவர் மீது தேவையற்ற அவதூறு பரப்ப வேண்டாம் என்று பிரபல வில்லேஜ் குக்கிங் சேனல் தெரிவித்துள்ளது.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications