திருவிழா கோலம் பூண்ட அண்ணா அறிவாலயம்! களைகட்டும் திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல்!
சென்னை: திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் களை கட்டியுள்ளதால் கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் திருவிழா கோலம் பூண்டுள்ளது.
மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்களிடம் ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, உள்ளிட்டோர் விருப்பமனுக்கள் பெற்று வருகின்றனர்.
தருமபுரி, கோவை, நெல்லை உட்பட குறிப்பிட்ட ஒரு சில மாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு பெரியளவில் போட்டியில்லை என்பதை உணர முடிகிறது.

மாவட்டச் செயலாளர்
திமுகவில் உட்கட்சித் தேர்தல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள கடந்த 2 நாட்களாக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் களை கட்டியுள்ளது. அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி என்பதால் இதற்கு திமுகவில் எப்போதுமே தனி மவுசு இருந்து வருகிறது. நேற்று தொடங்கிய தேர்தல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று விருப்பமனு பெறப்பட்டது.

அமைச்சர் செந்தில்பாலாஜி
இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விருப்பமனு பெறப்படுகிறது. இதனிடையே அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு அளிப்பதற்காக இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த போது அவருடன் ஒரு பெரும் படையே வந்திருந்தது. அவருடன் வந்திருந்த கரூர் மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் வாடிய முகத்துடன் காணப்பட்டார்.

இன்றும் நாளையும்
இதேபோல் பல மாவட்டங்களிலும் போட்டியின்றி மாவட்டச் செயலாளர்கள் தேர்வாகும் சூழல் உள்ளது. நாளை சனிக்கிழமை அன்று புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகை, தஞ்சை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை அன்று வேலுர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் திருவள்ளூர், சென்னை மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர் தேர்தல் நடைபெறுகிறது.

புதுமுகங்களுக்கு வாய்ப்பு
திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிவுகள் அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செயல்படாத சுமார் 10 மாவட்டச் செயலாளர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு அவர்கள் இடத்திற்கு புது முகங்களை ஸ்டாலின் களத்தில் இறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications