அசோக் நகர் பள்ளி நிகழ்ச்சியால் சர்ச்சை.. பள்ளிகளுக்கு கல்வித்துறையிடம் இருந்து பறந்த உத்தரவு
சென்னை: அசோக்நகர் அரசு பள்ளியில் மதம் சார்ந்த ஆன்மிக சொற்பொழிவு ஆற்றியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்திய மாணவர் சங்கத்தின் அமைப்பினர் இன்று அந்த பள்ளி வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கல்விக்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகளை அரசு அனுமதியின்றி பள்ளிகளில் நடத்த கூடாது. மீறி நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.
அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றன. இந்த நிலையில் மாணவிகளின் மன அழுத்தத்தை போக்க ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியை முடிவு செய்திருந்தார். இதற்காக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவர் வரவழைக்கப்பட்டார்.

மகா விஷ்ணு திடீரென சம்பந்தமே இல்லாமல் மறுபிறவி குறித்து பேசியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாவிஷ்ணு பேசுகையில், "மற்ற பிறவிகளில் செய்த பாவங்களால்தான் மறுபிறவி கிடைக்கிறது. போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் மாற்றுத்திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் பிறக்கிறார்கள். அது போல் கால், கை இழந்து, கண் பார்வையற்றவர்களாக பிறப்பதற்கு பாவங்கள்தான் காரணம்" என்று பேசினார்.
அப்போது அங்கிருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் இதனை கடுமையாக எதிர்த்தார். அப்போது அவர், மகாவிஷ்ணு, அறிவற்றவர் என விமர்சனம் செய்தார். இது பெரும் சர்ச்சையானது. இந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வெளியாகியது. மோட்டிவேஷன் ஸ்பீச் என்ற பெயரில் மகா விஷ்ணு என்பவர் மாணவிகளிடம் ஆன்மிகம் குறித்து சிந்தனைகளை போதித்ததாகவும், மத ரீதியான கருத்துக்களை தெரிவித்ததாகவும் கல்வியாளர்கள், மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்த நிலையில், கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சியை பள்ளிகளில் நடத்த தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி உத்தரவிட்டார். கல்விக்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகளை அரசு அனுமதியின்றி பள்ளிகளில் நடத்த கூடாது. மீறி பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சியை பள்ளிகளில் நடத்த தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி உத்தரவிட்டார். கல்விக்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகளை அரசு அனுமதியின்றி பள்ளிகளில் நடத்த கூடாது. மீறி பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்சிகள் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications