மீன்கள் விலை கம்மி.. காசிமேட்டில் களைகட்டிய கூட்டம்.. போட்டி போட்டு அள்ளிச் சென்ற மீன் பிரியர்கள்!
சென்னை: ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேடு மீன் சந்தையில் இன்று அதிகாலை முதலே குவிந்த அசைவ பிரியர்கள், ஆர்வமுடன் மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். கடந்த வாரத்தை விட மீன் விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்த 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று இரவு முதல் அதிகாலை வரை கரைக்கு திரும்பினர். மீனவர்கள் பலர் அதிக எடையுள்ள ராட்சத மீன்களை பிடித்து வி்ற்பனைக்கு கொண்டு வந்தனர்.

அதிகளவில் மீனவர்கள் இன்று கரைக்குத் திரும்பியதால் காசிமேடு மீன் சந்தையில் அதிக அளவில் மீன்கள் விற்பனைக்கு குவிந்து இருந்தது. மீன்களை வாங்க ஏராளமான மீன் பிரியர்கள் காசிமேட்டில் குவிந்தனர். அதிகாலை முதலே மீன்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் காசிமேட்டில் திரண்டிருந்தனர்.
கடந்த வாரத்தைவிட மீன்களின் விலை வகையைப் பொறுத்து 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை குறைவாகவே இருந்தது. வஞ்சிரம், சங்கரா, சீலா ஆகிய வகை மீன்கள் கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.50 முதல் 100 வரை விலை குறைவாக விற்பனை ஆனது. இதனால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடலில் கிடைக்கும் பெரிய வகை மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். சில்லறையாகவும், ஏலம் முறையிலும் மீன்களை பொதுமக்களும் வியாபாரிகளும் வாங்கிச் சென்றதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications