Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாகரீகமாக அழைத்த ஸ்டாலின்.. எட்டி கூட பார்க்காத அதிமுக தலைகள்.. திருக்குவளையில் திக்திக்.. படபடப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் இன்று நடைபெற்ற சம்பவம் ஒன்று பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் காலை உணவு திட்டம் பள்ளிகளில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல்முறையாக காலை உணவு திட்டம் பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.

None of the AIADMKians accepeted CM Stalin invitation to participate in School Breakfast Expansion ceremony

இந்த நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ₹404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதன்மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இதன் மூலம் இன்று மூலம் விரிவுபடுத்தப்பட்டு இடங்களிலும் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.

ஸ்டாலினின் கனவு திட்டங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் அனைத்து வகுப்புகளுக்கும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே தற்போது திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக மொத்தம் ரூ.33.56 கோடியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள 292 கிராமப் பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

அதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,543 அரசு தொடக்கப் பள்ளிகளில் 37 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மேலும் விரிவாக்கம்: இதையடுத்து முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துது. இதையடுத்து இன்று இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதுவரை இந்த திட்டம் செயல்படுத்தப்படாத தொடக்க பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.தமிழ்நாடு முழுக்க இன்று விரிவுபடுத்தப்பட்டது.

None of the AIADMKians accepeted CM Stalin invitation to participate in School Breakfast Expansion ceremony

ஸ்டாலின் அழைப்பு: திருக்குவளையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஊராட்சி பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து உணவு அருந்தினார். மாணவ , மாணவியருடன் சேர்ந்து ஸ்டாலின் உணவு சாப்பிட்டார். இந்த நிகழ்வில் அதிமுகவினரும் கலந்து கொள்ள வேண்டும், திருவாரூர் மாவட்ட அதிமுகவினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் அழைப்பும் விடுத்து இருந்தார்.

ஆனால் முதல்வரின் அழைப்பை அதிமுகவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. நாகரீக அரசியலை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் இந்த அழைப்பை விடுத்து இருந்தார். ஆனால் இதை அதிமுகவினர் கடைபிடிக்காமல் இருந்தது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

திட்டம் வெற்றி: கடந்த வருடம் மே மாதம் 7ம் தேதி இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார். தேசிய அளவில் இந்த திட்டம் கவனம் பெற்றுள்ளது. இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட 1,543 பள்ளிகளில் 1,319 பள்ளிகளிள் மாணவ, மாணவியர் வருகை பதிவேடு அதிகரித்து உள்ளது. மாநில திட்டமிடல் துறை சார்பாக எடுக்கப்பட்ட சர்வேயின் கீழ் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் வருகை 100 சதவீதம் உள்ளது. அதிலும் கவனிக்க வேண்டிய விஷயம் 1,086 பள்ளிகளில் வருகை 20% வரை அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் 22 பள்ளிகளில் 40% அளவிற்கு வருகை பதிவுவேடு உயர்ந்துள்ளது. இந்த திட்டம் மூலம் ஒரு மாணவருக்கு ₹12.71 ரூபாய் வரை ஒருநாளுக்கு செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+