BP மாத்திரை ரெடியா? தமிழக சட்டசபை தேர்தல் முன்னிலை விவரம் உறுதியாக தெரியவே மதியத்திற்கு மேல் ஆகலாம்!
சென்னை: வழக்கமாக, சட்டசபை தேர்தல்களின்போது, காலை 11 மணிக்கு பெரும்பாலான தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் தெரியவரும். யார் ஆட்சி அமைப்பது என்பதும், எந்தத் தொகுதியில் எந்தக் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதும் 12 மணிக்குள்ளேயே ஓரளவு உறுதிசெய்யப்பட்டு விடும். ஆனால், இந்த முறை தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளிலும் வெற்றியாளர் யார் என்பது உறுதியாகத் தெரியவர மாலை ஆகிவிடலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் இன்று வாக்கு எண்ணிக்கையின்போது முன்னிலை நிலவரம் உடனுக்குடன் அப்டேட் செய்யப்பட்டாலும், 4 முனை போட்டி நிலவுவதால், வெற்றி தோல்வி, மதியத்திற்கு மேல் தான் பெரும்பாலான தொகுதிகளில் தீர்மானிக்கப்படும் எனத் தெரிகிறது. திமுக, அதிமுகவுக்கு போட்டியாக விஜய்யின் தவெக களத்தில் இறங்கி, வலுவாக ஓட்டுகளைப் பிரிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதனால், பெரும்பாலான தொகுதிகளில், வெற்றியாளர்களுக்கும், 2ஆம் இடம் பெறுபவர்களுக்கும் இடையே வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. குறைவான வாக்கு வித்தியாசம் காரணமாக, எந்தச் சுற்றிலும் நிலைமை மாறலாம் என்ற சூழலே நிலவக்கூடும். இதனால், மதியம் வரை, வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்க முடியாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 5,000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் மட்டும், 39 வேட்பாளர்கள் தங்களது வெற்றி வாய்ப்பை இழந்தனர். 2021 தேர்தலில் தி.நகர், தென்காசி உள்ளிட்ட 24 தொகுதிகளில் 5,000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே திமுக வென்றது. திமுக கூட்டணி கடந்த முறை வென்றதில் சுமார் 90 தொகுதிகளில் 10,000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்த முறை தவெக களத்தில் இருப்பதால், வாக்கு வித்தியாசம் இன்னும் குறையக்கூடும் என்றும், இதனால், வெற்றியாளர் யார் என்பதே ஒவ்வொரு சுற்றிலும் மாறக்கூடும் அல்லது, குறைவான லீடிங்கிலேயே முன்னிலை வகிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதனால், மாலை வரை வெற்றி வேட்பாளர்களும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தான் அமர வேண்டியிருக்கும்.
தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்களை இசிஐநெட் (ECINet) செயலியிலும், results.eci.gov.in என்ற இணையதளத்திலும் மக்கள் தெரிந்து கொள்வதற்கான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. நமது ஒன் இந்தியா தளத்தில் உடனுக்குடன் தேர்தல் அப்டேட்களையும், சுவையான தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications