"1 டிகிரி.." பசிபிக் கடலில் நடந்த மாற்றம்.. தமிழக மழையில் என்ன தாக்கம்? தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்
சென்னை: பசிபிக் பெருங்கடலில் கடலின் வெப்பநிலை ஒரு டிகிரிக்கு குறைந்துள்ளதால் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம் வரை வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ் சேனலுக்கு அக்டோபர் மாதத்தில் கிடைக்க வேண்டிய மழையில் பாதியளவுதான் நமக்கு கிடைத்துள்ளது, அதாவது 150 மி.மீ. முதல் 200 மி.மீ வரை கிடைத்துள்ளது. நவம்பர் மாதம் முதல் இரு நாட்களிலேயே நமக்கு 200 மி.மீ. மழை கிடைத்துள்ளது.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் சென்னைக்கு கிடைக்கும் மழையின் அளவு 850 மி.மீ. ஆகும். அக்டோபர், நவம்பர் முதல் இரு நாட்கள் சேர்த்து சென்னைக்கு கிடைக்க வேண்டிய மழையில் பாதியளவு கிடைத்துவிட்டது. நவம்பரை பொருத்தமட்டில் மாதமானது தற்போதுதான் தொடங்கியது.

மிக கனமழை
அடுத்த இரு நாட்களுக்கு சென்னையை பொருத்தவரை கடந்த இரு நாட்களில் பார்த்தது போல் மிக கனமழை இல்லாமல் சராசரியாக 50 முதல் 60 மி.மீ. என பெய்யும். ஆங்காங்கே கனமழை பெய்யவும் மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. மீண்டும் ஒரு காற்றழுத்த பகுதி உருவாகினால் மழையின் தீவிரம் எப்படி என்பது தெரியும்.

வடகிழக்கு பருவமழை
பொதுவாக வடகிழக்கு பருவமழை வந்தால் எல்லா நாட்களிலும் மழை இருக்காது. சில நாட்கள் மழை, சில நாட்கள் பிரேக் இதுதான் மாடல், இப்படித்தான் இருக்கும். 3 அல்லது 4 நாட்கள் மழை இருக்கும். பிறகு பிரேக் இருக்கும். அடுத்த காற்றழுத்த பகுதி உருவாகி அது புயலாக மாறி அது வங்கதேசத்திற்கோ ஒடிஸாவுக்கோ சென்றால் 10 நாட்கள் பிரேக் கிடைக்கும்.

காற்றழுத்த பகுதி
அடுத்து வரும் காற்றழுத்த பகுதி எங்கே வரும் என்பதை பார்க்க வேண்டும். இது உறுதியாக சென்னைக்குத்தான் வரும் என நாம் சொல்ல முடியாது. இந்த இரு நாட்களில் சென்னையில் அதிக மழை இருந்தது. அடுத்த இரு நாட்கள் டெல்டா, தென் மாவட்டங்களில் மழை அதிகம் இருக்கும். அடுத்த காற்றழுத்தம் உருவாகி மன்னார் வளைகுடா சென்று குமரி கடலுக்கு போனால் தமிழகம் முழுவதும் உள்மாவட்டங்களில் கூட மழை பெய்யும்.

வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழையின் தாக்கம் எப்போதும் கடலோர மாவட்டங்களில் தான் அதிகாக இருக்கும். கடந்த ஆண்டு சென்னையில் டிசம்பர் கடைசி வரை மழை பெய்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் தமிழகத்திற்கே நல்லதொரு மழை பெய்தது. அது போல் இந்த பருவமழையும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம் வரை பெய்ய வாய்ப்புள்ளது என்றார் வெதர்மேன்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications