தமிழகத்தில் அக்.28-இல் வடகிழக்கு பருவமழை?.. பொழியுமா? இல்லை பொய்க்குமா?.. வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னை: தமிழகத்தில் வரும் 28-இல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழல் உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுவை, ஆந்திரா, கேரளா, தெற்கு கர்நாடகாவிலும் அக்டோபர் 28-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் வடக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்து கொண்டிருக்கிறது.

காற்று
இது முடிந்ததும் நிலைமை மாறி இன்று முதல் தமிழகம் மற்றும் ஆந்திர கடற்கரைப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கில் வடகிழக்கு மற்றும் கிழக்குத் திசையில் இருந்து காற்று வீசத் தொடங்கும்.

ஆந்திரா
இதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரம், ராயலசீமா, தெற்கு கர்நாடகா ஆகிய பகுதிகளில் வரும் 28-ஆம் தேதியையொட்டி தொடங்கக் கூடும். வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வடதமிழகத்தில் இயல்பையொட்டியும், தென் தமிழகத்தில் இயல்பை விட குறைவாகவும் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்ல மழைப் பொழிவு
இந்த முறை வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த ஆண்டு வங்கக் கடலில் இரு புயல்கள் உருவாகும். அவை தமிழகம் அருகே கரையை கடக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் நல்ல மழைப்பொழிவு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்கள்.

பருவமழை
அது போல் சென்னையிலும் பருவமழை தொடங்குவதற்கு முன்னர் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்கள். இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எப்போது மழை வரும் என்றே தெரியாத அளவிற்கு வானிலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவது நன்றாக தெரிகிறது. எதுவாகினும் வடகிழக்கு பருவமழை இந்த முறையாவது கைக் கொடுக்குமா என்பதை பார்ப்போம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications