சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மல்டி ஸ்டார்" நிபுணர் குழு.. தமிழ்நாடுதான் இதிலும் முன்னோடி.. அரசின் முடிவை புகழும் வட இந்தியர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்து இருக்கும் பொருளாதார வல்லுனர்களின் குழுவை வடஇந்தியர்கள் பலரும் வடஇந்திய ஊடகங்களும் பாராட்டி வருகின்றன.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்குவதற்காக புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன் தலைமையில் மாபெரும் ஆலோசனை நிபுணர் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு முதல்வர்களுக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்கும்.

தமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு தமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு

அமெரிக்காவின் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டாப்லோ என்ற பொருளாதார நிபுணரும், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் ஜீன் டிரேசல், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயணன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

ஆலோசனை

ஆலோசனை

இந்த குழு உருவாக்கப்பட்டதை வடஇந்திய ஊடகங்கள் பாராட்ட தொடங்கி உள்ளன. கொரோனா சமயத்தில், பொருளாதாரம் நலிவடைந்து இருக்கும் நேரத்தில் சர்வதேச வல்லுநர்களை ஒன்று திரட்டி முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்து இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். பொருளாதார சரிவில் இருந்து ஒரு மாநிலம் வேகமாக மீண்டு வருவதற்கு இது பெரிய அளவில் உதவும் என்று வடஇந்திய ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.

பாராட்டு

பாராட்டு

இன்னொரு பக்கம் இந்த செய்தியை பகிர்ந்து இருக்கும் வடஇந்தியர்கள் பலர் தமிழ்நாடு அரசின் முடிவை பாராட்டி உள்ளனர். இது சிறப்பான முடிவு. ஒரே துறையில் சிறந்து விளங்கும் களமிறக்கி மல்டி ஸ்டார் குழு போன்று அமைத்து இருக்கிறார்கள். இது கண்டிப்பாக தமிழ்நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறியுள்ளனர்.

வடஇந்தியா

வடஇந்தியா

மேலும், தமிழ்நாடு எடுக்கும் முடிவுகள் எப்போது மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும். தென் மாநிலங்களும், தமிழ்நாடும் எப்போதும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளது. இந்த முறையும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட ஏன் அதிகம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை நிரூபித்துவிட்டது.

 தமிழ்நாடு அனுபவம்

தமிழ்நாடு அனுபவம்

தமிழ்நாடு அரசுக்கு அனுபவத்தையும், அறிவையும் மதிக்கும் குணம் உள்ளது. அதனால்தான் வல்லுநர்களுக்கு நல்ல வாய்ப்பு கொடுத்துள்ளது. இதேபோன்ற முடிவை மற்ற மாநில அரசுகள் கடைபிடிக்கலாம். மாநில முதல்வர்கள் பலர் இதேபோல் வல்லுநர் குழுவை உருவாக்கலாம் என்று அறிவுரை வழங்கி உள்ளனர்.

எப்படி

எப்படி

தமிழ்நாட்டில் ஏற்கனவே நிதி அமைச்சராக பொருளாதார வல்லுநர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார். இன்னொரு பக்கம் திட்டக்குழுவின் துணை தலைவராக ஜெயரஞ்சன் இருக்கிறார். இப்போது முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் ரகுராம் ராஜன் எஸ்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட "அவெஞ்சர்ஸ்" படத்தில் வருவது போல சூப்பர் ஹீரோக்களை முதல்வர் ஸ்டாலின் களமிறக்கி உள்ளது வரவேற்புகளை பெற்றுள்ளது.

English summary
North India suprised with Tamilnadu government move to form Expert Financial Committee with Raghuram Rajan and others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X