36 வயசுதான்.. ஒத்த கொலுசுக்கு ஆசைப்பட்டு.. லாட்ஜில் ரூம் போட்டு.. அடுத்து நடந்த டிவிஸ்ட்!
வடமாநில பெண்ணிடம் கொள்ளை அடித்த நபரை தேடி வருகின்றனர்
சென்னை: பார்த்த கொஞ்ச நேரத்திலேயே நபரின் பேச்சில் மயங்கிவிட்டார் ஒரு பெண்.. கடைசியில் லாட்ஜில் ரூம் போட்டு, அதன்பிறகு நடந்த சம்பவம் இருக்கே...??
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அந்த பெண்.. பெயர் நிமிக்.. 36 வயசாகிறது.. நேற்று முன்தினம் அசாமில் இருந்து பிளைட்டில் சென்னைக்கு வந்திருக்கிறார்..
பிளைட்டில் பக்கத்து வீட்டில் உட்கார்ந்திருந்தவர் சலீம்.. ஒரே பிளைட் என்பதால் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி பேச ஆரம்பித்துள்ளனர்.

பேச்சு
பார்ப்பதற்கு சலீம் செம லுக்காக இருந்திருக்கிறார்.. டிப்டாப் உடை, நுனிநாக்கு இங்கிலீஷ், அன்பான பேச்சு போன்றவைகள் நிமிக்கை ஈர்த்துவிட்டது.. பிளைட்டில் சென்னை வந்து இறங்குவதற்குள் ரெண்டு பேரும் க்ளோஸ் ஆகிவிட்டார்கள். ஆசை வார்த்தைகள் என்னென்னமோ பேச, சலீமுடனேயே நிமிக்கும் பின்னாடியே சென்றார்.

லாட்ஜ்
பூங்கா நகரில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் போட்டுள்ளார்.. அங்கேயே தங்கியும் உள்ளனர்.. பிறகு, "நான் உனக்கு ஒரு கொலுசு வாங்கி தரேன் வா" என்று நிமிக்கை அழைத்து கொண்டு என்எஸ்சி போஸ் ரோட்டில் உள்ள அந்த ஃபேமஸான நகைக்கடைக்கு சென்றிருக்கிறார் சலீம்.. கடைக்காரர்கள் விதவிதமான கொலுசை எடுத்து காண்பிக்க, அதை ஒவ்வொன்றாக தன்னுடைய காலில் போட்டு அழகு பார்த்துக் கொண்டிருந்தார் நிமிக்.

மிஸ்ஸிங்
அப்போது, திடீரென பாத்ரூம் போகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துள்ளார் சலீம்.. அதோடு சரி.. ஆளை காணோம்.. போகும்போது நிமிக்கின் பர்ஸையும் லவட்டி கொண்டு போய்விட்டார். எவ்வளவோ நேரம் தேடி தேடியும் சலீமை காணவில்லை.. அந்த பர்ஸில் 15 ஆயிரம் ரூபாய் இருந்ததாம்.. இதுபோக, ஏடிஎம் கார்டு, செல்போன், பாஸ்போர்ட், போன்றவை இருந்திருக்கின்றன.

தலைமறைவு
வந்த இடத்தில், கையில் காசு இல்லாமல், எங்கு போவது என்று தெரியாமல் நிமிக் நடுரோட்டில் நின்று தவித்தபோதுதான், வந்த ரோந்து போலீசார் அந்த பக்கமாக வந்து விசாரித்திருக்கிறார்கள். நடந்ததை சொல்லி நிமிக் அழவும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.. சலீமையும் தேடி வருகிறார்கள். ஒத்த கொலுசுக்கு ஆசைப்பட்டு, நிமிக் என்னென்னவோ இழந்துவிட்டாரே?!
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications