ஸ்டாலினின் "நேஷனல்" திட்டம்.. டிஸ்டர்ப் பண்ணுங்க.. பாஜக எடுக்கும் சக்ரவியூகம்.. போட்டுடைத்த புள்ளி!
இந்தியா போன்ற ஒரே நாட்டில் உள்ளவர்களை இப்படி சொல்வது எவ்வளவு பெரிய தவறு என்று பத்திரிகையாளர் மணி விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் தேசிய அரசியலை உடைக்க வேண்டும் என்பதற்காகவே பாஜக வேண்டுமென்றே பொய்யான வீடியோக்களை பரப்பி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் கடந்த சில நாட்களாக பொய்யாக பல வீடியோக்கள் வேகமாக பரவின. இணையத்தில் இது தொடர்பாக பரவும் வீடியோக்கள் அனைத்தும் பொய்யானது ஆகும்.
இந்த வீடியோக்களை பரப்பும் நபர்கள் மீது போலீசார் அதிரடி ஆக்சன்களை எடுத்து வருகின்றனர் , பீகாரில் இந்த பொய்யான வீடியோக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈரோடு, நாமக்கல், கோவையில் வேலை பார்க்கும் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக பொய்யான செய்திகள் பரவி வருகின்றன.
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்
அவர் தனது பேட்டியில், புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனை உலகம் முழுக்க இருக்கும் பிரச்சனைதான். மனித குலம் நாகரீக வாழ்க்கை வாழ தொடங்கியதில் இருந்தே இதுதான் நடக்கிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மஹாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்குத்தான் பிற மாநில தொழில்கள் அதிகம் வருகிறார்கள். பீகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிகம் ஊழியர்கள் வருகிறார்கள். இங்கே இருக்கும் மாநிலங்கள் அதிகம் முன்னேறி உள்ளதால் அவர்கள் தமிழ்நாடு நோக்கி வருகிறார்கள். வளர்ச்சியால் ஏற்படும் பிரச்சனை இது. உலகளாவிய அளவில் மனிதன் எங்கு வேண்டுமானாலும் போய் வேலை பார்க்க எல்லா உரிமையும் இருக்கிறது.

ஐநாவின் சட்டம்
ஐநாவின் சட்டம் இதைத்தான் சொல்கிறது. இந்த சட்டத்தில் இந்தியாவும் கையெழுத்து போட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்லும் தொழிலாளியை வந்தேறி என்பது.. வடக்கன் என்பது எல்லாம் எவ்வளவு பெரிய தவறு. எவ்வளவு பெரிய மோசமான விஷயம். இந்தியா போன்ற ஒரே நாட்டில் உள்ளவர்களை இப்படி சொல்வது எவ்வளவு பெரிய தவறு. இந்த உலகமே ஒரு குடும்பம். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்ன மக்கள் நாம் . அவர்களால் நம்முடைய வேலைவாய்ப்பு பறிபோகும் என்பதெல்லாம் தேவையற்ற அச்சங்கள். இப்போது வரும் நபர்கள் எல்லாம் இளைஞர்கள். அவர்கள் வேலை முடிந்த பின் வயதானதும் மீண்டும் ஊருக்கு சென்று விடுகிறார்கள். அவர்கள் அங்கே வேலை இல்லாததால் இங்கே வருகிறார்கள்.

95 சதவிகித மக்கள்
இங்கே வரும் 95 சதவிகித மக்கள் தலித் மக்கள். அல்லது ஓபிசி மக்கள். அவர்களை ஒடுக்கி நாம் என்ன செய்ய போகிறோம். கேரளாவில் இதே அளவு தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அங்கே இதை பிரச்சனையாக பார்க்கவில்லை. மகாராஷ்டிராவில் இதை வைத்து அரசியல் செய்த சிவசேனா அதை கைவிட்டு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் சிலர் இதை கையில் வைத்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் ஸ்டாலினுக்கு எதிராக எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று தேசிய அளவிலான திட்டத்தை கூறினார். 3வது அணி உருவாக கூடாது. காங்கிரசை உள்ளடக்கிய அணியை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

விலை
அதற்கான விலைதான் திமுக இப்போது கொடுப்பது. மோடியை எதிர்க்கும் மம்தா, கெஜ்ரிவால், கேசிஆர் யாரும் கூட்டணி பற்றி பேசவில்லை. ஆனால் ஸ்டாலின் பேசுகிறார். ஸ்டாலின் இதை கையில் எடுத்துள்ளதால் அவருக்கு எதிராக இப்படி செய்கிறார்கள். பீகாரின் பாஜகவே மறுநாளே பொய்யான வீடியோக்களை பரப்புகிறார்கள். எங்கோ நடந்த விஷயங்களை, பச்சை பொய்யை வேண்டும் என்று பரப்புகிறார்கள். தேஜஸ்வி இங்கே வந்ததால் இப்படி செய்கிறார்கள். ஸ்டாலினின் தேசிய அரசியல் பயணம் தடுக்கப்பட வேண்டும் என்று இப்படி செய்கின்றனர். ஸ்டாலினின் தேசிய திட்டத்தை டிஸ்டர்ப் செய்ய வேண்டும் என்று செய்கின்றனர். பாஜக திட்டமிட்டு இந்த பச்சை பொய்யை பரப்பி வருகிறது. மோடியை சீண்டினால் உன்னை சீண்டுவோம் என்று திட்டமிட்டு செய்துள்ளனர். எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இது. என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications