சென்னையில் வெயில் எட்டி பாக்குதேனு நினைக்காதீங்க.. இன்றும் மழை இருக்கு.. 28 வரை இப்படிதான்.. நார்வே
Recommended Video
சென்னை: சென்னையில் இன்று பிற்பகல் மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 4 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழை வேலூரையே புரட்டிபோட்டுவிட்டது.
எங்கு பார்த்தாலும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. வேலூரை சுற்றியுள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில் சென்னையில் இத்தனை நாட்கள் வறட்சி நிலவி வந்த நிலையில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது.

மேகமூட்டம்
இந்த நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு காரணமாக கடந்த 3 தினங்களாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் லேசாக தூறல் இருந்து வந்தது .பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பிற்பகல் மழை பெய்யும்
இதையடுத்து நேற்று இரவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெய்யவில்லை. இன்று காலை முதல் வெயில் தலைகாட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று பிற்பகல் மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று பிற்பகல் மழை பெய்யும். அதுபோல் இன்று நள்ளிரவு முதல் நாளை வரை ஒரு சில இடங்களில் கனமழையும் லேசான மழையும் பெய்யும். பின்னர் புதன்கிழமையும் மழை பெய்யும். காலையில் மழை இருக்காது. மாலை முதல் இரவு வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நார்வே வானிலை மையம்
இது போல் வியாழக்கிழமை மாலையும் வெள்ளிக்கிழமையும் மாலை லேசான மழை பெய்யும். பின்னர் சனி, ஞாயிறு, திங்கள் என 28-ஆம் தேதி வரை லேசான மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications